தமிழ்நாடு

பிளஸ் 1 சிறப்புத் துணைத் தேர்வு: மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி

DIN

தமிழகத்தில் கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற பிளஸ் 1 சிறப்புத் துணைத் தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியான நிலையில், வினாத்தாள் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க திங்கள்கிழமை (ஆகஸ்ட் 5) கடைசி நாளாகும்.
கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற பிளஸ் 1 வகுப்பு சிறப்புத் துணைத் தேர்வுக்கான விடைத்தாள் நகல் கடந்த வியாழக்கிழமை ள்ஸ்ரீஹய்.ற்ய்க்ஞ்ங்.ண்ய் என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டது. விடைத்தாள் நகலினை பதிவிறக்கம் செய்தபிறகு, மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க விரும்பினால், அதே இணையதள முகவரியில் Application for Retotalling/Revaluation என்ற தலைப்பினை கிளிக் செய்து விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 
இந்த விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் திங்கள்கிழமை காலை 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் ஒப்படைக்க வேண்டும். மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டுக்கான கட்டணத்தை முதன்மைக் கல்வி அலுவலகத்தில் பணமாகச் செலுத்த வேண்டும். 
மறுகூட்டலுக்கு உயிரியல் பாடத்துக்கு மட்டும் ரூ.305, ஏனைய பாடங்கள் ஒவ்வொன்றுக்கும் ரூ.205, மறுமதிப்பீட்டுக்கு ஒவ்வொரு பாடத்துக்கும் ரூ.505 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மறுமதிப்பீடு, மறுதேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பம்

பிளஸ் 2 தேர்வு: பள்ளிகள் வாரியாக தேர்ச்சி விகிதம்

பிளஸ் 2 முடிவுகள்: திருப்பூர் முதலிடம்.. டாப் 5 மாவட்டங்கள்?

பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: பாட வாரியாக நூற்றுக்கு நூறு பெற்ற மாணவர்கள்

பிளஸ் 2 தோ்வு முடிவுகள் வெளியீடு: 94.56% பேர் தேர்ச்சி!

SCROLL FOR NEXT