தமிழ்நாடு

தண்டவாளத்தில் மூங்கில் மரங்கள் விழுந்ததால் சென்னை -கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயில் தாமதம்

DIN

திருநெல்வேலி மாவட்டம், செங்கோட்டை அருகே பகவதிபுரம் பகுதி ரயில் தாண்டவாளத்தில் வெள்ளிக்கிழமை மூங்கில் மரங்கள் சாய்ந்ததால், சென்னை - கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்றரை மணி நேரம் தாமதமாகச் சென்றது.


செங்கோட்டை மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் கடந்த 3 நாள்களாக பலத்த மழை பெய்து வருகிறது. 

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலை பகவதிபுரம் - ஆரியங்காவு இடையே ரயில் தண்டவாளப் பாதையில் பகவதிபுரம் அருகே தொடர் மழை காரணமாக அப்பகுதியில் இருந்த மூங்கில் மரங்கள் அதிகாலை 5.30 மணியளவில் வேரோடு முறிந்து தண்டவாளத்தில் விழுந்தன. 
இதுகுறித்து தகவலறிந்த செங்கோட்டை ரயில்வே ஊழியர்கள் விரைந்து சென்று

தண்டவாளத்தின் நடுவில் விழுந்து கிடந்த மூங்கில் மரங்களை அப்புறப்படுத்தினர். 


இதனால், சென்னையில் இருந்து கொல்லம் செல்லவிருந்த எக்ஸ்பிரஸ் ரயில் 
சுமார் ஒன்றரை மணிநேரம் தாமதமாக காலை 7 மணிக்கு கொல்லம் புறப்பட்டுச் சென்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

இன்று யோகமான நாள்!

பயிா்களை சேதப்படுத்திய யானைக் கூட்டம்

பிரதமா் மோடியை ‘சக்திவாய்ந்தவராக’ சித்தரிக்கும் பாஜக: குஜராத்தில் பிரியங்கா விமா்சனம்

நவீன வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணா்வு

SCROLL FOR NEXT