தமிழ்நாடு

குழந்தை விற்பனை வழக்கு: 4 பேருக்கு ஆக.28 வரை காவல் நீட்டிப்பு

DIN


 குழந்தை விற்பனை வழக்கில் நான்கு பேருக்கு ஆக.28-ஆம் தேதி வரை காவலை நீட்டித்து நாமக்கல் தலைமை குற்றவியல் நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தைச் சேர்ந்தவர் அமுதா. இவர், சட்டவிரோதமாக குழந்தைகளை வாங்கி விற்பனை செய்ததாக எழுந்த புகாரையடுத்து, கடந்த ஏப்ரல் 26-ஆம் தேதி, அவர் உள்பட எட்டு பேரை ராசிபுரம் போலீஸார் கைது செய்தனர்.  
அதன்பின், இவ்வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. அவர்கள் விசாரணை மேற்கொண்டு, சேலம் ஆரம்ப சுகாதார நிலைய செவிலிய உதவியாளர் சாந்தி,  பெங்களூரு அழகுக் கலை நிபுணர் ரேகா ஆகியோரை கைது செய்தனர். அமுதாவின் கார் ஓட்டுநர் நந்தகுமார் திருச்சி நீதிமன்றத்தில் சரணடைந்தார்.  இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 11 பேரும், கடந்த மூன்று மாதங்களாக சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.
 ஆகஸ்ட் 1-ஆம் தேதி அமுதா உள்பட 4 பேரும், அடுத்த ஓரிரு நாளில், மேலும் 4 பேரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.  சேலத்தைச் சேர்ந்த செவிலிய உதவியாளர் சாந்தி, கார் ஓட்டுநர் நந்தகுமார், இடைத்தரகர்கள் செல்வி, ரேகா ஆகியோர் மட்டும் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில், நாமக்கல் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில், புதன்கிழமை பிற்பகலில் நீதிபதி ஏ.பி.லதா முன்பாக நான்கு பேரும்  ஆஜர்படுத்தப்பட்டனர்.  அவர்களுக்கு ஆகஸ்ட் 28-ஆம் தேதி வரை காவலை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.  இதனிடையே சாந்தியும், செல்வியும் ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்த நிலையில்,  அவர்களுக்கு ஆதரவாக நீதிமன்றத்தில் முன்மொழிய யாரும் வராததால்,  இருவரது ஜாமீன் மனுவும் ஒரு வாரமாக காத்திருப்பில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இங்கு மிளிர்வது.. ஆஷ்னா சவேரி!

அழகான ராட்சசியே..!

கேரி கிறிஸ்டன் பாகிஸ்தான் கிரிக்கெட்டில் மாற்றத்தை ஏற்படுத்துவார்: பாபர் அசாம்

சின்னதுரையின் உயர் கல்விக்கு துணை நிற்பேன்: அன்பில் மகேஸ்

‘காங்கிரஸின் கனவு தகர்க்கப்படும்’: அனுராக் தாக்குர்

SCROLL FOR NEXT