தமிழ்நாடு

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் மேல் நடவடிக்கை கைவிடப்பட்டது: லஞ்ச ஒழிப்புத்துறை

DIN

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் மேல் நடவடிக்கை கைவிடப்பட்டது என்று லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது. 

கடந்த 2011 முதல் 2013ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, தல்லாகுளத்தை சேர்ந்த மகேந்திரன் என்பவர் வழக்கு தொடர்ந்தார். 

இவ்வழக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இவ்வழக்கில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான மேல் நடவடிக்கை கைவிடப்பட்டது என்று லஞ்ச ஒழிப்புத்துறை, பொதுத்துறை தரப்பில் சீலிட்ட கவரில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. 

அதில், மேல் நடவடிக்கை கைவிடப்பட்டதற்கான காரணம் குறிப்பிடப்படாததால் வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் வருகிற 26ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய பொதுத்துறை செயலருக்கு உத்தரவிட்ட நீதிமன்றம் வழக்கை ஒத்திவைத்தது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பள்ளி நூலகத்துக்கு புத்தகங்கள்...

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

அணிவகுத்து நின்ற வாகனங்கள்...

வருங்கால வைப்பு நிதி குறை தீா்க்கும் முகாம்

மும்பை விமான நிலையத்தில் 21 கிலோ தங்கம் பறிமுதல்!

SCROLL FOR NEXT