தமிழ்நாடு

தேசிய கல்விக் கொள்கை  வரைவு:  கருத்து தெரிவிக்க இன்று கடைசி

DIN


புதிய தேசிய கல்விக் கொள்கை வரைவு  குறித்த கருத்து தெரிவிக்க வியாழக்கிழமை (ஆகஸ்ட் 15) கடைசி நாளாகும்.
மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் மனிதவள மேம்பாட்டுத் துறை அண்மையில் தேசிய வரைவு கல்விக் கொள்கையை வெளியிட்டது.  அதில் ஆங்கிலம், இந்தியில் மட்டுமே இந்த கல்விக் கொள்கை வெளியிடப்பட்டிருந்தது.
இதையடுத்து, அந்த வரைவு அறிக்கையின் முக்கிய பகுதிகள் தமிழாக்கம் செய்யப்பட்டு
www.tnscert.org  என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வரைவு கல்வி கொள்கை குறித்து ஆசிரியர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள், கல்வியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவிக்கும்படி அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதற்கான கால அவகாசம் ஜூலை 31-ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், கல்விக் கொள்கை அம்சங்களை முழுமையாக அறிந்து கொள்ள அவகாசத்தை நீட்டிக்குமாறு தமிழக அரசியல் கட்சித் தலைவர்களும், எம்.பி.க்களும் அவகாசம் கேட்டிருந்தநிலையில் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது.  
இந்த நிலையில் கருத்து தெரிவிப்பதற்கான அவகாசம் வியாழக்கிழமை மாலையுடன் முடிவடைகிறது.  
தேசிய கல்விக் கொள்கை குறித்து நாடு முழுவதும் இதுவரை 1.52 லட்சம் பேர் கருத்து தெரிவித்துள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தல் முடிவுகள்: யூனியன் பிரதேசங்களின் நிலை என்ன?

மாலை 5.30 மணி: பாஜக 38, காங்கிரஸ் 11 தொகுதிகளில் வெற்றி

மக்களவைத் தேர்தல் நேரலை: பிரதமர் மோடி, அமித் ஷா வெற்றி...

லடாக்கில் சுயேச்சை வேட்பாளர் வெற்றி

ஆந்திரத்திற்கு சிறப்பு அந்தஸ்து: காங். பொதுச் செயலாளர்!

SCROLL FOR NEXT