தமிழ்நாடு

ராஜீவ் காந்தி சிலை உடைப்பு: கே.எஸ். அழகிரி கண்டனம்

DIN


ராஜீவ் காந்தி சிலையை உடைத்தவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக  புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
திருநெல்வேலி பாப்பான்குளம் பிரதான சாலையில் அமைந்துள்ள ராஜீவ் காந்தியின் மார்பளவு உருவச் சிலையை சமூக விரோதிகள் சிலர் சிதைத்து, தலையைத் துண்டித்துள்ளனர். இந்தச் செயல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. 
 இந்தச் சம்பவம் குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை செய்து குற்றவாளிகளை அடையாளம் கண்டு உடனே அவர்களைக் கைது செய்ய வேண்டும்.
அவரது சிலையைச் சிதைத்து, அவமதித்ததை காங்கிரஸ் கட்சியினர் எவரும் சகித்துக் கொள்ள மாட்டார்கள். இத்தகைய சமூக விரோத செயலைச் செய்தவர்கள் யார் என்பதை அடையாளம் காண வேண்டிய பொறுப்பு காவல் துறையினருக்கு இருக்கிறது என்று அவர் கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகள் சீரமைப்பு

ஹைதராபாத் பல்கலை. மாணவர் ரோஹித் வெமுலா ‘தலித்’ அல்ல: மறுவிசாரணை நடத்த முடிவு!

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: 8 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

SCROLL FOR NEXT