தமிழ்நாடு

மழையால் பாதிக்கப்பட்ட நீலகிரி மாவட்ட மக்களை சீமான் நேரில் சந்தித்து ஆறுதல் 

மழை மற்றும் நிலச்சரிவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நீலகிரி மாவட்ட மக்களை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி நிவாரணப்பொருட்களை வழங்கினார்.

DIN

நீலகிரி: மழை மற்றும் நிலச்சரிவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நீலகிரி மாவட்ட மக்களை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி நிவாரணப்பொருட்களை வழங்கினார்.

இதுதொடர்பாக நாம் தமிழர் கட்சி வியாழனன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

நீலகிரியில் தொடர்ந்து 5 நாட்களாக கனமழை பொழிந்து பல இடங்களில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் பல மலைக் கிராமங்கள் தண்ணீரில் தத்தளிக்கின்றன. நீலகிரி மாவட்டத்தில் உள்ள அணைகளிலிருந்து அதிகளவு நீர் வெளியேற்றப்பட்டுவருகிறது. இதனால் ஆறுகள் மற்றும் ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவு விளை நிலங்கள் நீரில் மூழ்கின. நூற்றுக்கணக்கான வீடுகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் இன்று 15-08-2019 வியாழக்கிழமை நீலகிரியில் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து நிவாரண உதவிகள் வழங்கி ஆறுதல் கூறினார்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அறிவியல்,பொறியியல் பட்டதாரிகளுக்கு சயின்டிஸ்ட் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

தலைவா முகத்தைப் பார்க்கணும்... ரஜினியால் ரசிகர்கள் உற்சாகம்!

நட்பு ரீதியான போட்டியில் சரமாரியாகத் தாக்கிக்கொண்ட கால்பந்து வீரர்கள்!

ரயில்வேயில் வேலை வேண்டுமா?: விளையாட்டு வீரர்களுக்கு வாய்ப்பு!

இப்போதும் மேக்கப் போடுவதற்கு முன் பாக்கியராஜை நினைப்பேன்: ஊர்வசி

SCROLL FOR NEXT