தமிழ்நாடு

திருச்செந்தூர் கடற்கரையில் தீவிர ரோந்து பணி 

DIN

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கடற்கரையில் கடலோரக் காவல் படையினர் சிறப்பு வாகனங்களுடன் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
 தமிழகத்தில் தீவிரவாதிகள் ஊடுருவியதாக வந்த உளவுத் துறை எச்சரிக்கையைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. காவல்துறை சார்பில் 6 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு, கூடுதல் கண்காணிப்பாளர்கள், துணைக் கண்காணிப்பாளர்கள், ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் இரவு 12 மணி முதல் காலை 6 மணிவரை முழுவதும் ரோந்து பணியில் ஈடுப்பட்டுள்ளனர். இதே போல கடற்கரைப் பகுதியில் கடலோரக் காவல் படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் கடற்கரை மணலில் இயங்கும் சிறப்பு வாகனத்தின் உதவியுடன் திருச்செந்தூர் முதல் மணப்பாடு வரையிலான கடலோரப் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
 கூடுதல் பாதுகாப்பு: திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் காவல் துணைக் கண்காணிப்பாளர் ஆ.பாரத் தலைமையில் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

இன்று யோகமான நாள்!

பயிா்களை சேதப்படுத்திய யானைக் கூட்டம்

பிரதமா் மோடியை ‘சக்திவாய்ந்தவராக’ சித்தரிக்கும் பாஜக: குஜராத்தில் பிரியங்கா விமா்சனம்

நவீன வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணா்வு

SCROLL FOR NEXT