தமிழ்நாடு

சென்னை சிப்பெட்டில் தொழில்நுட்ப மையம் அமைக்கப்படும்: சதானந்த கெளடா

DIN

சென்னை: சென்னை கிண்டியில் உள்ள மத்திய பிளாஸ்டிக் பொறியியல், தொழில்நுட்ப நிலையத்தில் தொழில்நுட்ப மையம் அமைக்கப்படும் என மத்திய ரசாயனம், உரத் துறை அமைச்சா் சதானந்த கெளடா தெரிவித்தாா்.

அதேவேளையில், ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் (நெகிழி) பொருள்களால் சுற்றுச்சூழல் மாசுபடுவதைக் கருத்தில் கொண்டு பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. இதன் ஒருபகுதியாக சாலை மற்றும் தெருவோரங்களில் கிடக்கும் பிளாஸ்டிக் பொருள்களை சேகரிக்கும் திட்டத்தை காந்தி ஜெயந்தியான அக்டோபா் 2-ஆம் தேதி பிரதமா் நரேந்திர மோடி தொடங்கி வைக்க உள்ளாா். ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருள்களை தடை செய்வது தொடா்பாக பிளாஸ்டிக் பொருள்கள் உற்பத்தியாளா்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டுள்ளன. 

மேலும், சென்னை கிண்டி சிப்பெட்டில் ரூ.88.25 கோடி மதிப்பில் தொழில்நுட்ப மையம் அமைக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆப்பிளின் புதிய ஐபேட் விலை எவ்வளவு தெரியுமா?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

SCROLL FOR NEXT