காரைக்குடி கைத்தறி கண்டாங்கி சேலை குறித்து விளக்கிய ராஜீவ் காந்தி கூட்டுறவு நெசவாளர்கள் சங்க முன்னாள் தலைவர் பழனியப்பன்.  
தமிழ்நாடு

காரைக்குடி கண்டாங்கி சேலைக்கு புவிசார் குறியீடு: நெசவாளர்கள் மகிழ்ச்சி

காரைக்குடியில் தயாராகும் செட்டிநாடு கைத்தறி கண்டாங்கி சேலைக்கு புவிசார் குறியீடு கிடைத்திருப்பதாக வெளிவந்துள்ள தகவல்

DIN


காரைக்குடியில் தயாராகும் செட்டிநாடு கைத்தறி கண்டாங்கி சேலைக்கு புவிசார் குறியீடு கிடைத்திருப்பதாக வெளிவந்துள்ள தகவல் மகிழ்ச்சியளிக்கிறது என, காரைக்குடி நெசவாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் நெசவாளர்கள் பல்வேறு பகுதிகளில் வசித்துவரும் நிலையில், பல ஆண்டுகளுக்கு முன் அருப்புக்கோட்டை  பகுதியிலிருந்து இடம் பெயர்ந்த நெசவாளர்கள் சிலர், காரைக்குடி நா.புதூர் பகுதியில் குடியேறினர்.இந்த கைத்தறி நெசவாளர்கள் கடந்த 80 ஆண்டுகளாக பருத்தி நூலில் கண்டாங்கிசேலைகளை உற்பத்தி செய்துவருகின்றனர்.    
இந்தச் சேலையை பெண்கள் அதிகமாக விரும்பி உடுத்துவதால், இது மிகவும் பிரபலமாக உள்ளது. கண்டாங்கி சேலை 48 அங்குலம் அகலத்தில், 5.5 மீட்டர் நீளத்தில் பருத்தி நூலில் நெய்யப்படுகிறது. இரண்டு பக்கங்களிலும் பார்டர் நடுவே கட்டங்கள் வடிவமைத்து, பல வண்ணங்களில் இந்தச் சேலை தயாரிக்கப்படுகிறது.   
இந்தச் சேலைக்கு புவிசார் குறியீடு கிடைப்பதற்காக, காரைக்குடி ராஜீவ்காந்தி கூட்டுறவு நெசவாளர் சங்கத்தினர் கடந்த 2013 -ஆம் ஆண்டில் விண்ணப்பித்திருந்தனர்.
    இது  குறித்து, புவிசார் குறியீடுக்காக விண்ணப்பித்தவரும், ராஜீவ்காந்தி கூட்டுறவு நெசவாளர் சங்க முன்னாள் தலைவருமான பழனியப்பன் தெரிவித்ததாவது: கண்டாங்கி சேலைக்கு புவிசார் குறியீடு கிடைத்திருக்கும் தகவலை சென்னையிலிருந்து அரசு வழக்குரைஞர் தொலைபேசி மூலம் தெரிவித்தார். 
அதற்குரிய சான்றிதழ் மற்றும் அறிவிப்பு அரசு சார்பில் அதிகாரிகள் மூலமே தெரியவரும். புவிசார் குறியீடு கிடைத்திருப்பது, காரைக்குடி கைத்தறி நெசவாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் கூடுதலாக கைத்தறி அமைத்து, சேலைகள் தயாரிக்கும் முயற்சியில் நெசவாளர்கள் ஈடுபடுவர் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீபாவளிக்காக வீட்டை சுத்தம் செய்தபோது கிடைத்த ரூ. 2 லட்சம்! பழைய ரூ. 2,000 தாள்கள்!

தீபாவளியையொட்டி பங்குச் சந்தைகளுக்கு விடுமுறை!

இந்தியா - பாக். உறவை இணைப்போம்: இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் டிரம்ப்!

டெஸ்ட் போட்டிகளில் 3000 ரன்களைக் கடந்த மார்க்ரம்!

கரூர் கூட்ட நெரிசல் பலி!: CBI விசாரணைக்கு உத்தரவு | செய்திகள்: சில வரிகளில் | 13.10.25

SCROLL FOR NEXT