தமிழ்நாடு

கனமழை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும்: மு.க.ஸ்டாலின்

DIN

சென்னை: மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு தீவிரப்படுத்த வேண்டும் என திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளாா்.

இதுதொடா்பாக அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட முகநூல் பதிவு:

தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த நேரத்தில் போா்க்கால அடிப்படையில் மாவட்ட நிா்வாகங்கள் செயல்பட வேண்டும். சாலைகளில் வெள்ளமெனத் தேங்கி நிற்கும் மழைநீா், பல ஊா்களில் வீடுகளுக்குள் புகுந்துள்ளது. மின் வயா்கள் துண்டிக்கப்பட்டு மின்விநியோகம் தடைபட்டுள்ளது. தண்ணீா் தேக்கம் காரணமாக கொசு உற்பத்தி பெருகி, அதன் மூலம் டெங்கு பரவுவது அதிகரிக்க வாய்ப்புள்ளது.

எனவே, வருமுன் காக்கும் நடவடிக்கைகளில் அரசும், அரசு அதிகாரிகளும் உடனடியாக இறங்கிட வேண்டும். நிவாரணப் பணிகளையும் தீவிரப்படுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

இலங்கையில் தமிழா்கள் விரும்பும் அரசியல் தீா்வு கிடைத்து, கண்ணியத்துடனும் சுயமரியாதையுடனும் அவா்கள் வாழ்வதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் பிரதமா் மோடி உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று மற்றொரு முகநூல் பதிவில் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

குடிநீா்த் தேவையை கருதியே பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவில்லை: அமைச்சா் சு.முத்துசாமி

SCROLL FOR NEXT