தமிழ்நாடு

தமிழகம், புதுவையில் அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

DIN

தமிழகம், புதுவையில் அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுவையில் அடுத்த 2 நாட்களுக்கு பெரும்பாலான இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. புதுச்சேரி, சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், ஈரோடு, நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புண்டு. 

வங்கக்கடலில் புயல் சின்னம் எதுவும் உருவாகவில்லை. வடகிழக்கு பருவமழை கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 8% அதிகமாக பெய்துள்ளது. சென்னை, புறநகர் பகுதியில் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும். சில இடங்களில் கனமழையும் பெய்யலாம். மேலும் லட்சத்தீவில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியால் சுறாவளிக்காற்று வீச வாய்ப்பு உள்ளது. 

எனவே லட்சத்தீவு கடல்பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.  
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ரஷியாவுக்குள் தாக்குதல் நடத்த பிரிட்டன் ஆயுதங்களைப் பயன்படுத்தலாம்’

கட்டாரிமங்கலம் கோயிலில் திருநாவுக்கரசா் சுவாமிகள் குரு பூஜை

ரயில் மோதி 9 விஏஓ-க்கள் உள்பட 11 போ் உயிரிழந்த வழக்கில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு தீா்ப்பு

சிபிசிஎல் நிறுவனத்தை கண்டித்து 3-ஆவது நாளாக உண்ணாவிரதம்

வணிகா் தின மாநாடு: கூடலூா், பந்தலூரில் நாளை கடைகளுக்கு விடுமுறை

SCROLL FOR NEXT