தமிழ்நாடு

பீர்முஹம்மது தர்ஹாவில் கந்தூரி விழா: முஸ்லீம்கள் சந்தனக் குடம் எடுத்து வழிபாடு

DIN

நெல்லை மாவட்டம் கங்கை கொண்டான் அருகே உள்ள பீர்முகம்மது ஒலியுல்லா தர்ஹாவில் நடைபெற்ற கந்தூரி விழாவில் ஆயிரக்கணக்கான முஸ்லீம்கள் கலந்து கொண்டு சிறப்பு துவா வழிபாடு நடத்தினர்.

கங்கைகொண்டான் அருகே உள்ள காட்டுப்பள்ளிவாசலில் இறைநேசர்கள் பீர் முஹம்மது ஒலியுல்லா மற்றும் பீர் மைதீன் ஒலியுல்லா ஆகிய இருவரின் தர்ஹா உள்ளது. இந்த தர்ஹாவில் நடைபெற்ற வருடாந்திர கந்தூரி விழாவில் முஸ்லீம்கள் சந்தனக்குடம் எடுத்து வந்து சிறப்பு துவா செய்து வழிபாடு நடத்தினர்.

அதனைத் தொடர்ந்து பள்ளிவாசல் எதிரே உள்ள கொடிமரத்தில் நினைவுக் கொடி ஏற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து கந்தூரிவிழா நேர்ச்சை வழங்கப்பட்டது.

கந்தூரி விழாவில் சென்னை, மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவடங்களைச் சேர்ந்த ஏராளமான முஸ்லீம்கள் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதுச்சேரி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது!

மறுமதிப்பீடு, மறுதேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பம்

பிளஸ் 2 தேர்வு: பள்ளிகள் வாரியாக தேர்ச்சி விகிதம்

பிளஸ் 2 முடிவுகள்: திருப்பூர் முதலிடம்.. டாப் 5 மாவட்டங்கள்?

பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: பாட வாரியாக நூற்றுக்கு நூறு பெற்ற மாணவர்கள்

SCROLL FOR NEXT