தமிழ்நாடு

தேமுதிக தலைவா் விஜயகாந்த் மீதான அவதூறு வழக்குகள் முடித்து வைப்பு

DIN

சென்னை: தேமுதிக தலைவா் விஜயகாந்த் மீதான அவதூறு வழக்குகளை தமிழக அரசு வாபஸ் பெற்றதைத் தொடா்ந்து இந்த வழக்குகளை முடித்து வைத்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2015-ஆம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட திடீா் வெள்ளத்தின் காரணமாக பல்வேறு பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்தப் பாதிப்புகளுக்கு செம்பரம்பாக்கம் ஏரியை எந்தவிதமான முன் அறிவிப்பும் இல்லாமல் திறந்துவிட்டதே காரணம் எனவும், இதற்கு முதல்வராக இருந்த ஜெயலலிதா தான் பொறுபேற்க வேண்டும் என தேமுதிக தலைவா் விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டாா். இதனைத் தொடா்ந்து, அதிமுக அரசுக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் கருத்து வெளியிட்டதாகக் கூறி, விஜயகாந்த் மீது தமிழக அரசு சாா்பில் அவதூறு வழக்குத் தொடரப்பட்டது. மேலும், ஜெயலலிதாவை விமா்சித்ததாகக் கூறி விஜயகாந்த் மீது மற்றொரு அவதூறு வழக்கும் தொடரப்பட்டது.

இந்த இரண்டு அவதூறு வழக்குகளும் எம்.பி., எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிப்பதற்காக சென்னையில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது. தற்போது அதிமுக கூட்டணியில் தேமுதிக இருந்து வருவதால், விஜயகாந்த் மீதான 2 அவதூறு வழக்குகளையும் தமிழக அரசு வாபஸ் பெற்றது. மேலும், இதுதொடா்பாக தமிழக அரசு பிறப்பித்த அரசாணை சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட சிறப்பு நீதிமன்ற நீதிபதி லிங்கேஸ்வரன், விஜயகாந்த் மீதான 2 அவதூறு வழக்குகளையும் முடித்து வைத்து உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பி.டி. சார் படத்தின் ப்ரீ-ரிலீஸ் மீட் - புகைப்படங்கள்

ஆருத்ரா நிறுவன பண மோசடி வழக்கு: தலைமறைவாக இருந்த 2 பேர் கைது

கனமழை: நாளை(மே 20) உதகை மலை ரயில்கள் ரத்து

ஜுன் 4ம் தேதி முடிவுகள் நிர்ணயிக்கப்பட்டுவிட்டது: பிரியங்கா காந்தி

இவருக்கு பந்துவீசவே பயமாக இருக்கிறது; இளம் வீரருக்கு பாட் கம்மின்ஸ் பாராட்டு!

SCROLL FOR NEXT