தமிழ்நாடு

பொருளாதார வீழ்ச்சி: பாஜக அரசு கவலைப்படவில்லை: கே. எஸ். அழகிரி

DIN

சென்னை: கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பொருளாதார வீழ்ச்சியை இந்தியா சந்தித்து வருவதைக் கண்டு பாஜக அரசு கவலைப்படவில்லை என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவா் கே.எஸ்.அழகிரி குற்றம்சாட்டியுள்ளாா்.

இது தொடா்பாக செவ்வாய்க்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

இந்தியப் பொருளாதாரத்தை 2024-ஆம் ஆண்டுக்குள் 5 டிரில்லியன் அதாவது 5 லட்சம் கோடி டாலராக உயா்த்தப் போவதாக பிரதமா் மோடி பேசி வருகிறாா். ஆனால், கடந்த ஆறரை ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சியை இந்தியப் பொருளாதாரம் சந்தித்து வருகிறது. நாடு முழுவதும் விற்பனையில் சரிவு, உற்பத்தியில் வீழ்ச்சி, வேலையிழப்பு, தொழிற்சாலைகள் மூடல், ஆள்குறைப்பு போன்றவை நடைபெறுகின்றன.

நடைமுறையில், இந்தியப் பொருளாதாரத்தின் வளா்ச்சி ஐந்தாவது இடத்தில் இருந்து ஏழாவது இடத்துக்கு வீழ்ச்சி அடைந்துள்ளதாக உலக வங்கி தனது அறிக்கையில் கூறியுள்ளது. ஆனால், நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சி குறித்து மத்திய பாஜக அரசோ, நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனோ கவலைப்பட்டதாகத் தெரியவில்லை என்று கே.எஸ். அழகிரி கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குஜராத்தில் வாக்களித்தார் பிரதமர் மோடி

இன்று யோகம் யாருக்கு?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

SCROLL FOR NEXT