தமிழ்நாடு

17 பேரின் உயிரிழப்புக்குக் காரணமான சுற்றுச்சுவரை இடிக்கும் பணி தொடக்கம்; உரிமையாளர்கள் எதிர்ப்பு!

DIN

மேட்டுப்பாளையத்தில் 17 பேரின் உயிரிழப்புக்குக் காரணமான சுற்றுச்சுவரை இடிக்கும் பணியில் நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். 

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியிலுள்ள தனியார் துணிக்கடை உரிமையாளா் சிவசுப்ரமணியம் என்பவரது வீட்டின் சுற்றுச்சுவர், கனமழை காரணமாக திங்கள்கிழமை அதிகாலை 5.30 மணிக்கு திடீரென சரிந்து அருகிலுள்ள குடியிருப்புகள் மீது விழுந்தது. இந்த விபத்தில் 17 பேர் உயிரிழந்துள்ளனர். இது தொடர்பாக வீட்டின் உரிமையாளர்  சிவசுப்ரமணியம் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், மீதியுள்ள சுற்றுசுவரை பாதுகாப்பான முறையில் இடிக்கப்படும் என ஏற்கனவே மாவட்ட ஆட்சியர் ராசாமணி அறிவித்திருந்தார். அதனடிப்படையில், 17 பேரின் உயிரிழப்புக்குக் காரணமான சுற்றுச்சுவரை இடிக்கும் பணியில் நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். நகராட்சி மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் மேற்பார்வையில் சுவரை இடிக்கும் பணி நடைபெற்று வருகிறது. சுவரை இடிப்பதற்கு உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். நகராட்சி ஆணையர் அவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எச்.டி. ரேவண்ணா கைது!

ஆம்பூர் அருகே சூறாவளி காற்றுடன் கன மழை: வாழை மரங்கள் சேதம்

இங்க நான் தான் கிங்கு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

குஜராத் டைட்டன்ஸ் பேட்டிங்; அணியில் இரண்டு மாற்றங்கள்!

இந்திய அரசமைப்பின் மீது முழுவீச்சில் தாக்குதல் -ராகுல் காந்தி

SCROLL FOR NEXT