தமிழ்நாடு

ஜெயலலிதா நினைவுநாள்: நினைவிடத்தில் முதல்வர், துணை முதல்வர் மரியாதை

DIN


சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 3ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு தினத்தை முன்னிட்டு கருப்பு சட்டை அணிந்தபடி, வாலாஜாபாத் சாலை வழியாக பேரணியாக சென்ற முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள், சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

பிறகு, ஜெயலலிதா நினைவிடத்தில் முதல்வர், துணை முதல்வர் உட்பட அமைச்சர்கள் அனைவரும் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.

ஜெயலலிதாவின் 3ம் ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு, அவரது நினைவிடம் ஃபீனிக்ஸ் பறவை போல அலங்கரிக்கப்பட்டிருந்தது.

முன்னாள் தமிழக முதல்வா் ஜெயலலிதா நினைவு நாளையொட்டி, மெரீனா கடற்கரையின் காமராஜா் சாலை, வாலாஜா சாலையில் சூழ்நிலைக்கு ஏற்ற வாறு வாகனங்கள் அனுமதிக்கப்படாது. மேலும், அந்தப் பகுதியில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படும் என்று சென்னை பெருநகர காவல்துறையின் போக்குவரத்து பிரிவு அறிவித்திருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜுபிடரின் நிலவோ.. ஸ்ரீமுகி!

”டீக்கடைக்காரரால் என்ன செய்ய முடியும்? விமர்சித்த காங்கிரஸின் நிலை..” பிரதமர் மோடி பிரசாரம்

ரிஷபத்துக்கு பெயர்ச்சி அடைந்தார் குருபகவான்

ஆடை சுதந்திரம் கோரியது குற்றமா? செளதியில் பெண்ணுரிமைப் போராளிக்குச் சிறை: அமைப்புகள் கண்டனம்!

"வாக்கு சதவிகித விவரங்களில் சந்தேகம்!”: திருமாவளவன் பேட்டி

SCROLL FOR NEXT