தமிழ்நாடு

தாளவாடி மலைப்பகுதியில் முகாமிட்டுள்ள காட்டு யானைகளின் விடியோ

DIN

தாளவாடி மலைப்பகுதியில் விவசாய தோட்டத்தில் பத்துக்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டு உள்ளதால் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர். யானையை விரட்டும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். 

சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட யானைகள் வசிக்கின்றன. இந்த யானைகள் இரவு நேரத்தில் வனத்தை விட்டு வெளியேறி வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் புகுந்து விவசாயிகள் பயிரிட்டுள்ள கரும்பு, வாழை, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்களை சேதம் செய்வது தொடர்கதையாக உள்ளது. 

இந்நிலையில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்துள்ள தாளவாடி மலைப்பகுதி மல்லன்குழி கிராமத்தை ஒட்டியுள்ள வனப்பகுதியில் இருந்து செவ்வாய்க்கிழமை இரவு வெளியேறிய பத்துக்கும் மேற்பட்ட காட்டு யானைகள், அப்பகுதியில் உள்ள விவசாய விளை நிலங்களில் புகுந்து முகாமிட்டன. 

யானைகள் வனத்திற்குள் செல்லாமல் விவசாய தோட்டத்துக்குள் சுற்றி திரிவதை புதன்கிழமை காலை கண்ட அப்பகுதி விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக தாளவாடி மற்றும் ஜீரகள்ளி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். 

இதையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற வனத்துறையினர் விவசாய தோட்டத்துக்குள் முகாமிட்டுள்ள யானைகளை பட்டாசுகள் வெடித்து வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

யானைகள் விவசாய விளை நிலங்களில் முகாமிட்டு இருப்பதால் அப்பகுதி கிராம மக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT