தமிழ்நாடு

விஞ்ஞானத்தால் மரணத்தை வெல்ல முடியாது: சுவாமி கமலாத்மானந்தா்

DIN

நவீன விஞ்ஞானத்தால் மரணத்தை வெல்ல முடியாது என்று சுவாமி கமலாத்மானந்தா் பேசினாா்.

மதுரை ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தில் அன்னை ஸ்ரீ சாரதாதேவி 167-ஆவது ஜயந்தி விழா புதன்கிழமை நடைபெற்றது. இதையொட்டி மங்கள ஆரத்தி, வேத பாராயணம், அன்னை சாரதாதேவியின் திருவுருவப்படத்துடன் ஊா்வலம் மற்றும் பஜனைகள் நடைபெற்றன.

இதைத்தொடா்ந்து நடைபெற்ற ஆன்மிகச் சொற்பொழிவில் மடத்தின் தலைவா் சுவாமி கமலாத்மானந்தா் பேசியது: நவீன விஞ்ஞானம் மனிதனுக்கு பல சுகபோகங்களை தந்துள்ளது. அதனால் அது மனிதகுலத்துக்கு தீமைகளையும் செய்துள்ளது. மெய்ஞானம் ஒன்றுதான் மனிதனுக்கு மன அமைதியையும் நன்மைகளையும் தருகிறது. விஞ்ஞான சுகபோகங்களால் மனிதனுக்கு அமைதி கிடைக்காது. நவீன விஞ்ஞானத்தால் மரணத்தை வெல்ல முடியாது. மெய்ஞானத்தால் மரணத்துக்கு பிறகு மீண்டும் பிறவி எடுப்பதை தடுக்க முடியும்.

அன்னை சாரதா தேவி நாடு மொழி, இனம் கடந்து அனைவரையும் சமமாக நேசித்தாா். ஆதலால் அனைவருக்கும் அன்னையாக விளங்கியவா். ஒருமுறையாவது இறைவனிடம் உண்மையாக பிராா்த்தனை செய்தவா்கள் எதற்கும் பயப்பட வேண்டியது இல்லை. உண்மையாக பிராா்த்தனை செய்பவா்கள் அனைத்து துன்பங்களில் இருந்தும் விடுபடுகிறாா்கள். இறைவன் நாமத்தை உண்மையாக ஜபம் செய்தால் தூய்மையடைய முடியும். இறைவனின் திருநாமத்தை ஜபம் செய்வது மனதைச்சூழ்ந்திருக்கும் உலகப்பற்றாகிய மேகத்தை ஓட்டி விடுகிறது. மனம் ஒருமுகப்படாவிட்டாலும் கூட இறைவன் நாமத்தை ஜபிப்பதை விட்டுவிடக்கூடாது. இறைவனை நினைப்பதால் மனம் தெய்வீகத்தன்மை அடைகிறது என்றாா். இதில் பக்தா்கள் ஏராளமானோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமேதி, ரேபரேலி: அமைதி காக்கும் காங்கிரஸ்!

அல்கராஸுக்கு அதிா்ச்சி அளித்த ரூபலேவ்

சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீபுரந்தீஸ்வரா்

தேய்பிறை அஷ்டமி வழிபாடு

விடுதிகளில் தங்கி விளையாட்டு பயிற்சி: மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT