வெள்ளி விழா ஆண்டு: ஆதரவற்றோருக்கு இலவசமாக முடி திருத்தும் கிறிஸ்துமஸ் தாத்தா!
கோவை சீரநாயக்கன்பாளையம் ரஜினி தேவராஜ் என்பவர் கடந்த 40 ஆண்டுகளாக முடிதிருத்தும் தொழில் செய்து வருகிறார்.
கோவை சீரநாயக்கன்பாளையம் ரஜினி தேவராஜ் என்பவர் கடந்த 40 ஆண்டுகளாக முடிதிருத்தும் தொழில் செய்து வருகிறார்.
கடந்த 25 ஆண்டுகளாக இவர் ஆதரவற்றவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் சாலையோரம் வசிக்கும் நபர்களுக்கு இலவசமாக முடி திருத்தும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார். மாதத்தில் பத்து நாட்கள் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று இலவசமாக முடி திருத்தும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்.
இந்நிலையில், தற்போது கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்து, கோவை அரசு மருத்துவமனை அருகே ஆதரவற்றவர்களுக்கு இலவசமாக முடி திருத்தும் பணியில் ஈடுபட்டார். இதுபோன்ற தருணங்கள் தனக்கு மிகுந்த மன நிம்மதியைத் தருவதாக ரஜினி தேவராஜ் கூறினார்.