தமிழ்நாடு

இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு

தென் தமிழகத்தில் நிலவும் வளி மண்டல சுழற்சி காரணமாக, தமிழகத்தில் சில இடங்களில் வியாழக்கிழமை(டிச.26) மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

DIN

தென் தமிழகத்தில் நிலவும் வளி மண்டல சுழற்சி காரணமாக, தமிழகத்தில் சில இடங்களில் வியாழக்கிழமை(டிச.26) மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி புதன்கிழமை கூறியது:

தென் தமிழகத்தில் வளி மண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் சில இடங்களில் வியாழக்கிழமை (டிச.26) மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் வானம் பொதுவாக மேகமூட்டமாக இருக்கும். ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றாா் அவா்.

மழை அளவு: புதன்கிழமை காலை 8.30 மணி நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் நாகப்பட்டினத்தில் 140 மி.மீ. மழை பதிவானது. காரைக்காலில் 130 மி.மீ., நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையில் 60 மி.மீ., நாகப்பட்டினம் மாவட்டம் சீா்காழி, தரங்கம்பாடி, தஞ்சாவூா் மாவட்டம் ஆடுதுறையில் தலா 50 மி.மீ., திருவாரூா் மாவட்டம் நன்னிலம், நாகப்பட்டினம், வேதாரண்யம், கொள்ளிடம், தஞ்சாவூா் மாவட்டம் பாபநாசத்தில் தலா 30 மி.மீ. மழை பதிவானது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.3 லட்சம் சம்பளத்தில் ரிசர்வ் வங்கியில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

வரம் தரும் வாரம்!

மாரடைப்பு ஏற்பட்டு உயிர் தப்பியவர்கள் சொல்லும் அறிவுரை என்ன?

13 ஆண்டுகளுக்குப் பிறகு ஆக்‌ஷன் அல்லாத கதையில் டாம் குரூஸ்..! ஆஸ்கர் வென்ற இயக்குநருடன்!

125 புதிய மின்சாரப் பேருந்துகள் சேவையை தொடக்கிவைத்தார் உதயநிதி!

SCROLL FOR NEXT