தமிழ்நாடு

இன்று நாகூர் தர்கா சந்தனக் கூடு ஊர்வலம்: பாதுகாப்புப் பணியில் 1,200 போலீஸார்

DIN


நாகூர் தர்கா சந்தனக் கூடு ஊர்வலத்துக்கான பாதுகாப்புப் பணியில் 1,200 போலீஸார் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
நாகூர் ஆண்டவர் தர்காவின் கந்தூரி விழா பிப். 6-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெறுகிறது. கந்தூரி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக் கூடு ஊர்வலம் வெள்ளிக்கிழமை இரவு நாகையிலிருந்து நடைபெறவுள்ளது.  சந்தனக் கூடு ஊர்வலத்தின் நிறைவில், சனிக்கிழமை அதிகாலை சுமார் 4.30 மணிக்கு நாகூர் ஆண்டவரின் புனித ரவுலா ஷரீபுக்கு சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
சந்தனக் கூடு ஊர்வலம் மற்றும் சந்தனம் பூசும் நிகழ்ச்சிகளில், இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த லட்சக்கணக்கானோர் பங்கேற்பர் என்பதையொட்டி, பக்தர்களுக்குத் தேவையான குடிநீர், கழிப்பறை, மருத்துவ முகாம்கள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்கு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விழாவில், அசம்பாவித சம்பவங்கள், குற்ற நிகழ்வுகள் நிகழாமலிருக்கவும், போக்குவரத்து சீரமைப்புக்கும் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்டக் காவல் துறை நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. 
சந்தனக் கூடு ஊர்வலம் மற்றும் சந்தனம் பூசும் விழா பாதுகாப்புப் பணிகளில், நாகை மாவட்டக் காவலர்கள் மற்றும் வெளி மாவட்டங்களைச் சேர்ந்த காவலர்கள், சிறப்பு காவல் படையினர் என சுமார் 1,200 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக நாகை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செ. விஜயகுமார்  தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வு ரத்து ரகசியம்- ஆர்.பி. உதயகுமார் கேள்வி

சின்னஞ்சிறு சித்திரமே....ரவீனா!

வேட்டையன் கதை வித்தியாசமானது: ராணா டக்குபதி

அயோத்தி ராமர் கோயிலில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி வழிபாடு

இவானா டுடே!

SCROLL FOR NEXT