தமிழ்நாடு

உயர்ந்த லட்சியத்துக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு: பாஜக மூத்த தலைவர் இல.கணேசன்

DIN

வாழ்க்கையை எந்த லட்சியத்துக்காக அர்ப்பணம் செய்தோமோ அந்த உயர்ந்த லட்சியத்துக்கு மக்கள் மத்தியில் ஆதரவு பெருகுவதாக பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் பேசினார்.
 பாரத மண்வாசனை சார்பில், "இல.கணேசனின் பொது வாழ்க்கை பொன்விழா' நிகழ்ச்சி சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தென் சென்னை மாவட்ட பாஜக தலைவர் டால்ஃபின் ஸ்ரீதரன் தலைமை வகித்தார்.
 பொற்றாமரை அமைப்பின் பொதுச் செயலாளர் கி.சங்கரன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் "ஐம்பதாண்டுகள் தமிழர் சமயம்' என்னும் தலைப்பில் முனைவர் சரஸ்வதி ராமநாதனும், "ஐம்பதாண்டுகள் தமிழர் இலக்கியம்' எனும் தலைப்பில் முனைவர் தெ.ஞானசுந்தரமும் பேசினர். இதைத் தொடர்ந்து, பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் பேசியது:
 இந்த உடல் ஆண்டவன் தந்தது. கடைசி நிமிஷம் வரை இந்த உடலுக்கு வேறு ஒருவர் தொண்டு செய்யும் நிலை வராமல் இருக்க வேண்டும். உடல் உள்ள வரை அடுத்தவருக்கு தொண்டு செய்தபடி இருக்கவேண்டும். ஆரம்ப நாள்களில் எது எல்லாம் பேசி வந்தேனோ அது எல்லாம் கற்பனை, கனவு என்று நானே நினைத்தது உண்டு. ஆனால் ஒரு நம்பிக்கை இருந்தது. எது எல்லாம் நடக்காது என்று நினைத்தோமோ அது எல்லாம் நடந்து கொண்டு இருக்கிறது. இதை பார்க்கும்போது எந்த லட்சியத்துக்கு வாழ்க்கையை அர்ப்பணம் செய்தோமோ அதற்கு மக்கள் மத்தியில் ஆதரவு பெறுகிறது. பாரதத் தாய் உலக அரங்கில் உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்பதே எனது லட்சியம் என்றார் அவர்.
 நிகழ்ச்சியில், மயிலாப்பூர் சட்டப்பேரவை உறுப்பினர் நடராஜ், திரைப்பட இயக்குநர் எஸ்.பி.முத்துராமன், எழுத்தாளர் சிவசங்கரி, கவிஞர்கள் முத்துலிங்கம், காசி முத்துமாணிக்கம், பேராசிரியர் வ.வே.சு., பாரத மண்வாசனை அமைப்பாளர் வீர.திருநாவுக்கரசு, வின் தொலைக்காட்சி உரிமையாளர் தேவநாதன், ஜெ.சுபாஷ் சந்திரபோஸ், கவிக்கோ ஞானசெல்வன் உள்பட பலர் பேசினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காரல் மாா்க்ஸ் பிறந்தநாள் விழா

3 மணி நேர போராட்டம்: ஸ்வியாடெக் முதல் முறை சாம்பியன்

வித்யா குரு அலங்காரத்தில் முனீஸ்வரா்...

இன்று வெளியாகிறது பிளஸ் 2 தோ்வு முடிவுகள்

துளிகள்...

SCROLL FOR NEXT