தமிழ்நாடு

விளையாட்டு வீரர்களுக்கு அரசுப் பணிகளில் 3 சதவீத இடம்: உத்தரவு வெளியீடு

DIN


விளையாட்டுப் போட்டிகளில் சாதனை படைக்கும் வீரர்களுக்கு அரசு பொதுத் துறை நிறுவனங்களில் 3 சதவீத இடஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் உத்தரவை தமிழக அரசு புதன்கிழமை வெளியிட்டுள்ளது. 
இதுகுறித்து இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறைச் செயலாளர் தீரஜ்குமார் வெளியிட்ட உத்தரவு:
விளையாட்டு வீரர்களுக்கு அரசுப் பணிகளில் 3 சதவீத இடஒதுக்கீடு அளிப்பது நான்கு பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
அதில், முதல் பிரிவாக,  ஒலிம்பிக்,  பாரா ஒலிம்பிக்,  காமன்வெல்த்,  ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வெல்வோருக்கு அரசு பொதுத்துறைகளில் பணியிடம் அளிக்கப்படும். இதன் தர ஊதியம் ரூ.5,400 மற்றும் அதற்கு அதிகமாக இருக்கும்.
இரண்டாவது பிரிவாக காமன்வெல்த்,  ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெள்ளி,  வெண்கலம் வெல்லும் வீரர்களுக்கும், பங்கேற்கும் வீரர்களுக்கும் தர ஊதியம் ரூ.4,400 மற்றும் அதற்கு மேலும் ரூ.5,400-க்குள்ளாக இருக்கும்படி பொதுத்துறைகளில் பணியிடம் அளிக்கப்படும்.
மூன்றாவது பிரிவாக ஆசிய,  காமன்வெல்த்,  தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்போருக்கும்,  தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வெல்வோருக்கும் தர ஊதியம் ரூ.2,400 மற்றும் அதற்கு மிகுந்த அளவிலும்,  அதேசமயம் ரூ.4,400-க்கும் கீழாகவும் இருக்கும்படி பொதுத் துறை நிறுவனங்கள், அரசுத் துறைகளில் பணியிடம் அளிக்கப்படும்.
நான்காவது பிரிவாக,  மாநில அளவிலான போட்டிகளில் பதக்கம் வெல்வோருக்கு பணியிடங்கள் அளிக்கப்படும். இது ரூ.2,400 தர ஊதியத்துக்குக் குறைவானதாக இருக்கும்.
வயது வரம்பு என்ன?: 3 சதவீத இடஒதுக்கீட்டு சலுகையைப் பெற விளையாட்டு வீரர்கள் கடந்த ஜனவரி 1-ஆம் தேதிக்கு பின்பாக விளையாட்டுத் துறையில் சாதனைகளை நிகழ்த்தி இருக்க வேண்டும்.
பதவியிடத்துக்கான அனைத்து கல்வித் தகுதிகளையும் பூர்த்தி செய்திருப்பதுடன், அதிகபட்ச வயது 40-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேலிக்காளாகும் ஜனநாயகம்!

ராஜ‌‌ஸ்​தா​னி‌ல் ஒரே க‌ல்லில் 18 அடி உயர காளி சிலை வடி‌ப்பு

மனித சக்தியைப் பாடிய பாவேந்தர்!

ராமா் திருக்கல்யாண வைபவம்: திரளான பக்தா்கள் பங்கேற்பு

அரசுப் பள்ளிகளில் அக்கறை காட்டுவோம்

SCROLL FOR NEXT