தமிழ்நாடு

தொகுதிப் பங்கீட்டுக் குழுவினருடன்  மு.க.ஸ்டாலின் ஆலோசனை

DIN


தொகுதிப் பங்கீட்டுக் குழுவினருடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை ஆலோசனை நடத்தினார்.
மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட்,விடுதலைச் சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உள்ளிட்ட கட்சிகள் உள்ளன.
காங்கிரஸுக்கு 10 தொகுதிகளும், முஸ்லிம் லீக்குக்கு ஒரு தொகுதியும்,  கொமதேகவுக்கு ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
மதிமுக உள்ளிட்ட இதரக் கட்சிகளுடன் திமுக பொருளாளர் துரைமுருகன் தலைமையிலான தொகுதிப் பங்கீட்டுக் குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்தப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எதுவும் எட்டப்படவில்லை.
மதிமுக, மார்க்சிஸ்ட் தலா 3 தொகுதிகளையும், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் தலா 2 தொகுதிகளையும் கேட்டு வருகின்றன.
இந்த நிலையில், தொகுதிப் பங்கீட்டுக்கு குழுவினருடன் அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை ஆலோசனை நடத்தினார். அப்போது, கூட்டணிக் கட்சிகள் கேட்கும் தொகுதி எண்ணிக்கை நிலவரங்களை மு.க.ஸ்டாலினிடம் தெரிவித்து ஆலோசனை நடத்தினர். அதைப்போல, காங்கிரஸுக்கு எந்தெந்த தொகுதிகளை ஒதுக்கலாம் என்பது குறித்தும் இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இடுக்கி நீர்மட்டம் 35% ஆக குறைவு! வறட்சியின் விளிம்பில்...

ரூ.4 கோடி பறிமுதல்: நயினார் நாகேந்திரனின் உறவினர் உள்பட 2 பேர் விசாரணைக்கு ஆஜர்!

இயக்குநருடன் வாக்குவாதம்.. படப்பிடிப்பை நிறுத்திய சௌந்தர்யா ரஜினிகாந்த்?

வேலைகேட்டு சுயவிவரத்துடன் சுவையான பீட்சா அனுப்பியவர்! வேலை கிடைத்ததா?

மே மாதப் பலன்கள்!

SCROLL FOR NEXT