தமிழ்நாடு

ஜெயலலிதா அறிவித்த திட்டங்களை கிடப்பில் போட்டுள்ளனர்: டி.டி.வி. தினகரன்

DIN


முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்த மக்கள் நலத் திட்டங்களை இன்றைய தமிழக ஆட்சியாளர்கள் கிடப்பில் போட்டுள்ளனர் என அமமுக துணைப் பொதுச்செயலர் டி.டி.வி. தினகரன் தெரிவித்தார்.
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு பேருந்து நிலையத்தில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில், பல்வேறு நீர்ப்பாசனத் திட்டங்களை செயல்படுத்தக் கோரி வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில், அமமுக துணைப் பொதுச் செயலர் டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ. பேசியது: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்த மக்கள் நலத் திட்டங்களை, தற்போதைய தமிழக ஆட்சியாளர்கள் கிடப்பில் போட்டுள்ளனர். மாறாக, அவர் தடுத்த மக்கள் விரோத திட்டங்களை அமல்படுத்தி வருகின்றனர். அமமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவித்தவுடன், எண்ணேகொல்புதூர்-தும்பலஅள்ளி உள்ளிட்ட மூன்று இணைப்புக் கால்வாய்கள் திட்டத்தில் ஆயத்தப் பணிக்கு அனுமதி என அறிவித்துள்ளனர். இது மக்களை ஏமாற்றும் செயல். 
ஆனால், மீத்தேன், ஹைட்ரோ கார்பன், நியூட்ரினோ என ஜெயலலிதா தடுத்த திட்டங்களை, நிறைவேற்றுவதில் அதிக அக்கறை செலுத்துகின்றனர். தற்போது, நெய்வேலியில் ஏற்கெனவே கையகப்படுத்திய நிலங்கள் இருக்கும்போதே, மீண்டும் விளை நிலங்களை கையகப்படுத்த முயற்சிக்கின்றனர். இதற்கு அப் பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து மிகப்பெரிய போராட்டங்களை நடத்தி வருகின்றனர். 
திருவாரூர் இடைத் தேர்தலில் போட்டியிட திமுக, அதிமுவுக்கு அச்சம். எனவேதான், நீதிமன்றத்தில் தேர்தலைத் தள்ளிவைக்கக் கோரி வழக்கு தொடுக்கின்றனர். தேர்தல் நடந்திருத்தால், அமமுக நிச்சயம் வெற்றி பெற்றிருக்கும். எனவேதான், இரு கட்சிகளும் தேர்தலை வேண்டாம் என்று சொல்லி வந்தன. இதிலிருந்து திமுக, அதிமுக இடையே ரகசிய உடன்பாடு இருப்பது தெரியவந்துள்ளது. மக்களவைத் தேர்தல் மற்றும் 20 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடந்தால் அவற்றில் அமமுக வெற்றிபெறும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

SCROLL FOR NEXT