தமிழ்நாடு

திட்டமிட்டபடி ஜனவரி 22 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம்: ஜாக்டோ ஜியோ அறிவிப்பு  

DIN

மதுரை: திட்டமிட்டபடி ஜனவரி 22 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் நடைபெறும் என்று ஜாக்டோ ஜியோ அமைப்பு மதுரை உயர் நீதிமன்றக்  கிளையில் தெரிவித்துள்ளது. 

பழைய ஓய்வூதிய திட்டத்தினை அமல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். அரசு ஊழியர்களுக்கு ஊதிய முரண்பாடுகள் களையப்பட வேண்டும்.  ஏழாவது ஊதிய குழுவின் பரிந்துரையின் படி  21 மாத ஊதிய நிலுவை தொகையை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசு ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் அமைப்பான ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பு சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டது. 

இந்த போராட்டங்கள் தொடர்பாக மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது.  வழக்கு விசாரணைக்கு வந்த போது நீதிபதிகளின் யோசனையை ஏற்று போராட்டம் தள்ளி வைக்கப்பட்டது.

இந்நிலையில் திட்டமிட்டபடி ஜனவரி 22 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் நடைபெறும் என்று ஜாக்டோ ஜியோ அமைப்பு மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் தெரிவித்துள்ளது. 

இந்த வழக்கு மீண்டும் வெள்ளியன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வேலைநிறுத்தம் செய்ய மாட்டோம் என்ற உறுதிமொழியை நீதிமன்றத்திலிருந்து திரும்பப் பெற்ற பின் ஜாக்டோ ஜியோ தரப்பு கூறியதாவது:

எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசுத்தரப்பு தொடர்ந்து அவகாசம் மட்டுமே கோருகிறது. எனவே திட்டமிட்டபடி ஜனவரி 22ல் வேலைநிறுத்தம் நடைபெறும்.

இரு தரப்பு வாதத்தை தொடர்ந்து வழக்கு ஜனவரி 28-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ்-2 தோ்வு: நீலகிரியில் 94.27 சதவீதம் போ் தோ்ச்சி

நீலகிரிக்கு வருவதற்கு 21,446 போ் இ-பாஸ் பெற விண்ணப்பம்

எங்கே செல்லும் இந்தப் பாதை...?

ஈரோடு நகரில் டாஸ்மாக் கடையை அகற்றக் கோரிக்கை

பள்ளிச் செல்வத்துக்கு வந்த சோதனை!

SCROLL FOR NEXT