தமிழ்நாடு

முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு தடை கிடையாது: உயர் நீதிமன்றம் மறுப்பு  

DIN

சென்னை: முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனைக்கு தடை கிடையாது என்று உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. 

1998-ஆம் ஆண்டு நடந்த சம்பவம் ஒன்றில் கல்வீச்சு மற்றும் பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவித்ததாக தொடரப்பட்ட வழக்கில், தமிழக அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை மற்றும் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து சிறப்பு நீதிமன்றம்  சமீபத்தில் உத்தரவிட்டது. 

இதை எதிர்த்து அமைச்சர் தரப்பில் ஆஜரான வக்கீல் டி.செல்வம், உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய இருப்பதால் தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்தார். இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி, தண்டனையை நிறுத்தி வைப்பதாக அறிவித்தார்.  

ஆனால் மக்கள் பிரதிநித்துவ சட்டப்படி சிறை தண்டனை பெற்றால் எம்.பி., எம்.எல்.ஏ.பதவிகள்  தானாகவே பறிபோய்விடும். எனவே, நீதிமன்றத் தீர்ப்பை அடுத்து அமைச்சர் பதவியிலிருந்து பாலகிருஷ்ண ரெட்டி அன்றைய தினமே ராஜினாமா செய்தார்.

இந்நிலையில் முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனைக்கு தடை விதிக்கமுடியாது என்று உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அஜித் படத்தில் சிம்ரன், மீனா?

மரத்தில் கார் மோதி விபத்து: தாயுடன் மகன் பலி

கல்பனா சோரன் வேட்புமனுத் தாக்கல்!

கோடை விடுமுறை: ஏப். 30-ல் வண்டலூர் உயிரியல் பூங்கா திறந்திருக்கும்!

விஷமான சிக்கன் ஷவர்மா: 12 பேர் மருத்துவமனையில் அனுமதி!

SCROLL FOR NEXT