தமிழ்நாடு

நாட்டின் வளர்ச்சியில் நம்பிக்கை உள்ள கட்சிகளுடன் கூட்டணி: தமிழிசை செளந்தரராஜன்

DIN


நாட்டின் வளர்ச்சியில் அசராத நம்பிக்கை உள்ள கட்சிகளுடன் மட்டும் பாஜக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தும் என்று, அக் கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறினார்.
சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக மாநில தலைமை அலுவலகமான கமலாலயத்தில் திங்கள்கிழமை அவர் அளித்த பேட்டி: 
பாஜகவின் தமிழக மேலிடப் பொறுப்பாளராக பியூஷ் கோயல் நியமிக்கப்பட்டுள்ளார். 
தில்லியில் அவரை தமிழக பாஜகவின் மூத்த தலைவர்களுடன் சந்தித்து மக்களவைத் தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தினோம். தமிழகத்தில் பாஜகவை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்வேன் என்று அவர் உறுதியளித்துள்ளார். 
திமுக, காங்கிரஸ் கூட்டணியில் இடம்பெறாமல் நல்லாட்சியை விரும்பும், பிரதமராக மோடியை ஏற்றுக்கொள்ளும் கட்சிகளுடன்தான் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவோம். 
மேலும், நாட்டின் வளர்ச்சியில் அசராத நம்பிக்கை உள்ள கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவோம்.
கூடா நட்பு கேடாய் முடியும் என்ற தகவல் கொஞ்சம், கொஞ்சமாக இந்தியா முழுவதும் பரவி வருகிறது. பிரதமர் வேட்பாளராக ராகுல்காந்தியை மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதைக் கூட்டணி கட்சிகள்கூட ஏற்றுக்கொள்ளவில்லை என்றார்.
முன்னதாக, கமலாலயத்தில் தமிழிசை செளந்தரராஜன் தலைமையில் பொங்கல் விழா நடைபெற்றது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வருண், சால்ட் அசத்தலில் வென்றது கொல்கத்தா: தில்லிக்கு 6-ஆவது தோல்வி

இன்றைய நிகழ்ச்சிகள்

அணைகளின் நீா்மட்டம்

பள்ளி நூலகத்துக்கு புத்தகங்கள்...

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

SCROLL FOR NEXT