தமிழ்நாடு

முதல்வர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது

DIN


சென்னை:  சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று காலை 10 மணிக்கு தலைமை செயலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றுள்ளனர். 

வரும் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாடு குறித்த முக்கிய முடிவுகள் குறித்தும், தமிழகத்தில் புதிய தொழிற்சாலைகள் தொடங்க அனுமதி கோரியுள்ள நிறுவனங்கள் குறித்தும், புதிதாக தொழில் தொடங்க விருப்பம் தெரிவித்துள்ள நிறுவனங்களுக்கு சலுகைகள் வழங்குவது மற்றும் மத்திய பட்ஜெட்டை தொடர்ந்து தமிழக பட்ஜெட் தயாரிப்பு குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளது. 

இதேபோன்று கொடநாடு விவகாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீதான புகார்கள் குறித்தும் விவாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

முன்னதாக 2 முறை அமைச்சரவை கூட்டம் நடைபெற்றிருக்கிறது. இதில் முதலீட்டார்கள் மாநாடு தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. இதன்படி 30 நிறுவனங்கள், ரூ. 49 ஆயிரம் கோடி முதலீடு செய்ய நிர்வாக ரீதியில் அனுமதி அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓராண்டில் 674 காப்புரிமங்கள்: மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் சாதனை!

கணவருடன் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா! ரசிகர்கள் அதிர்ச்சி!

டி20 உலகக் கோப்பைக்கு ஹார்திக் பாண்டியா சரியான தேர்வு; முன்னாள் வீரர் ஆதரவு!

எச்.டி.ரேவண்ணா மீது மேலும் ஒரு வழக்கு

வேட்டையன் படப்பிடிப்பில் அமிதாப் பச்சன்-ரஜினிகாந்த்!

SCROLL FOR NEXT