தமிழ்நாடு

மு.க.ஸ்டாலின் திசை தெரியாத காட்டில் தவித்துக் கொண்டிருக்கிறார்: அமைச்சர் ஜெயகுமார் பரபரப்பு பேட்டி

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திசை தெரியாத காட்டில் தவித்துக் கொண்டிருக்கிறார் என்று அமைச்சர் ஜெயகுமார் தெவித்தார்.

DIN


சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திசை தெரியாத காட்டில் தவித்துக் கொண்டிருக்கிறார் என்று அமைச்சர் ஜெயகுமார் தெவித்தார்.

சென்னையில் இன்று அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், கொடநாடு விவகாரத்தில் கைது செய்யப்பட்டவர்களின் பின்னணியில் திமுக உள்ளது. சயான், மனோஜ் திமுகவின் கட்டுப்பாட்டில் உள்ளதாவும், சயான் மற்றும் மனோஜ் ஆகியோருக்கு ஆதரவாக திமுகவை சேர்ந்த வழக்குரைஞர்கள் ஆஜராகி வாதாடி ஜாமின் வாங்கி கொடுத்துள்ளார்கள். வாதாடியவர்களும், ஜாமின் கொடுத்தவர்களும் திமுகவை சேர்ந்தவர்கள் என குற்றம்சாட்டினார்.

அதிமுக மீது களங்கம் கற்பிக்க வேண்டும் என்ற உள்நோக்கத்தில் திமுக செயல்படுகிறது. திமுக தலைவர், மு.க.ஸ்டாலின் திசை தெரியாத காட்டில் தவித்துக் கொண்டிருக்கிறார். கடந்த காலங்களில் திமுக இரட்டை வேடம் கொண்டிருந்ததை மக்கள் அறிவர். தேர்தல் சூழ்நிலைக்கு ஏற்ப கட்சிகளின் நிலைப்பாட்டில் மாறுபாடு இருக்கும்.

அதிமுக என்பது இமயம். தேர்தல் கூட்டணி அமைந்தால் அதற்கு இமயமான அதிமுகவே தலைமை ஏற்கும். கட்சி அடையாளத்தை விட்டுக்கொடுக்க முடியாது. பாஜக உள்ளிட்ட எந்த கட்சிக்கும் பயப்படாத ஒரே இயக்கம் அதிமுக. நாங்கள் எதற்காகவும் அச்சப்படத் தேவையில்லை என்றார் ஜெயகுமார். 

மேலும், பட்டாசு தொழிலை பாதுகாக்கும் வகையில் அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும்பட்டாசு தொழிலை பாதுகாக்கும் வகையில் அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என்று கூறினார் ஜெயகுமார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

கூத்தாநல்லூரில் ஆடிப்பெருக்கு

SCROLL FOR NEXT