தமிழ்நாடு

முதல் உலக முதலீட்டாளர் மாநாட்டின் மூலம் எத்தனை தொழில்கள் தொடங்கப்பட்டன? நீதிமன்றம் சரமாரிக் கேள்வி

2015ம் ஆண்டு நடைபெற்ற முதல் உலக முதலீட்டாளர் மாநாடு குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

DIN


சென்னை: 2015ம் ஆண்டு நடைபெற்ற முதல் உலக முதலீட்டாளர் மாநாடு குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முதல் உலக முதலீட்டாளர் மாநாடு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசு வழக்குரைஞரிடம் நீதிபதிகள் சரமாரிக் கேள்விகளை எழுப்பினர்.

அதாவது, 2015ம் ஆண்டு நடைபெற்ற உலக முதலீட்டாளர் மாநாட்டின் மூலம் தமிழகத்தில் எத்தனை தொழில்கள் தொடங்கப்பட்டன?

முதல் உலக முதலீட்டாளர் மாநாட்டின் மூலம் தொடங்கப்பட்ட தொழில்கள் மூலம் எத்தனை பேர் வேலை வாய்ப்புப் பெற்றனர்?

முதல் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் எத்தனை புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன? அந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் தற்போதைய நிலை என்ன? என்பது உள்ளிட்ட பல கேள்விகளை நீதிபதிகள் எழுப்பினர்.

மேலும், 2015ம் ஆண்டு நடைபெற்ற முதல் உலக முதலீட்டாளர் மாநாடு குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழகத்திலிருந்து வந்த ரசமலாய்! பாம்பே என்று பேசிய அண்ணாமலையை விமர்சித்த ராஜ் தாக்கரே

தங்கம், வெள்ளி விலை மீண்டும் அதிரடி உயர்வு

காங்கிரஸின் துரோகத்தை பராசக்தி காட்டியுள்ளது: அண்ணாமலை

கரூர் சம்பவம்: சிபிஐ விசாரணைக்கு ஆஜராக தில்லி புறப்பட்டார் விஜய்

தெலங்கானா: 300 தெரு நாய்கள் கொல்லப்பட்ட விவகாரத்தில் 9 பேர் மீது வழக்கு

SCROLL FOR NEXT