தமிழ்நாடு

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் ஏற்பாடுகள்: மாநில அரசுடன் தேர்தல் ஆணையம் ஆலோசனை

DIN

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகள் குறித்து மாநில அரசின் தலைமைச் செயலாளர் உள்ளிட்ட உயரதிகாரிகளுடன் இந்திய தேர்தல் ஆணையம் திங்கள்கிழமை ஆலோசனை நடத்தியது. காணொலிக் காட்சி மூலம் நடந்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழகத்தில் செய்யப்பட்டு வரும் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து விளக்கப்பட்டது.
தமிழகத்தில் 39 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. இந்தத் தொகுதிகளில் தேர்தல் நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தமிழக தேர்தல் துறை செய்து வருகிறது. குறிப்பாக, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை தயார் நிலையில் வைப்பது, வாக்குப் பதிவு மையங்களை உருவாக்குவது போன்ற பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளில் உள்ள முன்னேற்றங்கள் குறித்து தமிழக அரசுத் துறை உயரதிகாரிகளுடன் இந்திய தேர்தல் ஆணையம் திங்கள்கிழமை ஆலோசனை நடத்தியது.
தமிழக அரசு அதிகாரிகள் தலைமைச் செயலகத்தில் இருந்தும், தேர்தல் ஆணைய அதிகாரிகள் தில்லியில் இருந்தும் காணொலிக் காட்சி வழியாக ஆலோசனை நடத்தினர்.
நிதி மற்றும் சட்டம்-ஒழுங்கு: தேர்தல் ஆணையம் நடத்திய ஆலோசனைகள் குறித்து தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறியது:-
மக்களவைத் தேர்தலை நடத்துவதற்குத் தேவையான நிதி உள்ளதா, சட்டம்-ஒழுங்கு பிரச்னைகள் ஏதும் இருக்கிறதா என்பன போன்ற கேள்விகள் தேர்தல் ஆணையத்தின் சார்பில் கேட்கப்பட்டன. தமிழக அரசின் சார்பில், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், சட்டம்-ஒழுங்கு டிஜிபி தே.க.ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தேர்தல் நடத்துவதற்கான தொடக்க நிலை கூட்டமே இதுவாகும்.
இறுதி வாக்காளர் பட்டியல் வரும் 31-இல் வெளியிடப்படும். அரசு ஊழியர்கள் போராட்டத்தால் பட்டியலை வெளியிடுவதில் எந்தப் பாதிப்பும் ஏற்படாது. 20 தொகுதிகளுக்கான இடைத் தேர்தலை தேர்தல் ஆணையமே முடிவு செய்யும் என்றார் சாகு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிக வெயில் ஏன்? வானிலை ஆய்வு மையம் விளக்கம்!

பிணைக்கைதிகளில் மேலும் ஒருவர் பலி: இஸ்ரேல்

ரே பரேலியில் போட்டியிடும் ராகுல்: துல்லியமாக காய்நகர்த்தும் காங்கிரஸ்!

மூத்த பத்திரிகையாளர் ஐ.சண்முகநாதன் மறைவு: மு.க.ஸ்டாலின் இரங்கல்

1000க்கும் அதிகமான திரைகளில் ‘நடிகர்’ திரைப்படம்!

SCROLL FOR NEXT