தமிழ்நாடு

தலைமைச் செயலக ஊழியர்கள் வரும் வெள்ளி முதல் தொடர் வேலைநிறுத்தம் 

DIN

சென்னை: தலைமைச் செயலக ஊழியர்கள் வரும் வெள்ளி முதல் தொடர் வேலைநிறுத்தம் செய்யப்  போவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஊதிய உயர்வு மற்றும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கமான ஜாக்டோ  ஜியோ அமைப்பினர் கடந்த 22-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தலைமைச் செயலக ஊழியர்கள் வரும் வெள்ளி முதல் தொடர் வேலைநிறுத்தம் செய்யப்  போவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதுதொடர்பாக தலைமைச் செயலக ஊழியர்கள் சங்கத் தலைவரான அந்தோணிசாமி தெரிவித்துள்ளதாவது:

ஜாக்டோ  ஜியோ அமைப்பினரின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக தலைமைச் செயலக ஊழியர்களும் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளோம்.

அதற்கு முன்னோட்டமாக வரும் புதன்கிழமையன்று அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளோம்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சங்கங்களை அரசு உடனே அழைத்துப் பேசி, சுமுகத் தீர்வு காண  வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.   

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ரஷியாவுக்குள் தாக்குதல் நடத்த பிரிட்டன் ஆயுதங்களைப் பயன்படுத்தலாம்’

கட்டாரிமங்கலம் கோயிலில் திருநாவுக்கரசா் சுவாமிகள் குரு பூஜை

ரயில் மோதி 9 விஏஓ-க்கள் உள்பட 11 போ் உயிரிழந்த வழக்கில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு தீா்ப்பு

சிபிசிஎல் நிறுவனத்தை கண்டித்து 3-ஆவது நாளாக உண்ணாவிரதம்

வணிகா் தின மாநாடு: கூடலூா், பந்தலூரில் நாளை கடைகளுக்கு விடுமுறை

SCROLL FOR NEXT