தமிழ்நாடு

நாளை வேலைக்கு வராவிட்டால்... : தலைமைச் செயலக ஊழியர்களுக்கு கிரிஜா வைத்யநாதன்  எச்சரிக்கை 

DIN

சென்னை: நாளை அடையாள வேலைநிறுத்தம் செய்து வேலைக்கு வராவிட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தலைமைச் செயலக ஊழியர்களுக்கு தலைமைச் செயலளார் கிரிஜா வைத்யநாதன்  எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஊதிய உயர்வு மற்றும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கமான ஜாக்டோ  ஜியோ அமைப்பினர் கடந்த 22-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அவர்களது போராட்டம் ஒரு வாரமாக தொடந்த நிலையில் தலைமைச் செயலக ஊழியர்கள் வரும் வெள்ளி முதல் தொடர் வேலைநிறுத்தம் செய்யப்  போவதாக திங்களன்று அறிவிப்பு வெளியானது. 

இதுதொடர்பாக தலைமைச் செயலக ஊழியர்கள் சங்கத் தலைவரான அந்தோணிசாமி திங்களன்று செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

ஜாக்டோ  ஜியோ அமைப்பினரின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக தலைமைச் செயலக ஊழியர்களும் வெள்ளி முதல்  தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளோம்.

அதற்கு முன்னோட்டமாக வரும் புதன்கிழமையன்று அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளோம்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சங்கங்களை அரசு உடனே அழைத்துப் பேசி, சுமுகத் தீர்வு காண  வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்திருந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அனுராக் தாக்குர் பேச்சு: தேர்தல் ஆணையத்தில் சீதாராம் யெச்சூரி புகார்

சிலிண்டர் வெடித்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மருத்துவமனையில் அனுமதி!

உதகையில் 73 ஆண்டுகளில் பதிவான 84.2 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம்!

காங்கிரஸ் கட்சிக்கு மறதியா? ராஜ்நாத் சிங்

ருதுராஜ், டேரில் மிட்செல் அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 213 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT