தமிழ்நாடு

வாரிசு அரசியல் விமரிசனத்துக்கு எனது செயல்பாடு தக்க பதிலாக இருக்கும்: உதயநிதி ஸ்டாலின்

DIN


வாரிசு அரசியல் விமரிசனத்துக்கு எனது செயல்பாடு தக்க பதிலாக இருக்கும் என்று திமுக இளைஞரணிச் செயலாளராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

திமுக இளைஞரணிச் செயலாளராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்படுவதாக கட்சியின் பொதுச்செயலாளர் க. அன்பழகன் இன்று (வியாழக்கிழமை) அறிவித்தார். இந்த அறிவிப்பு வெளியானதையடுத்து, ஒருபுறம் ஆதரவும், மறுபுறம் வாரிசு அரசியல் என்கிற விமரிசனமும் எழுந்து கொண்டிருக்கிறது. 

இந்த நிலையில், உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், 

"என் மீது நம்பிக்கை வைத்து இந்த மிகப் பெரிய ஒரு பொறுப்பை தலைவர் என்னிடம் ஒப்படைத்திருக்கிறார். இதை நான் எதிர்பார்க்கவில்லை. எனக்கான ஒரு பொறுப்பாகவோ, அங்கீகாரமாகவோ இதை நான் கருதவில்லை. ஒட்டுமொத்த திமுக இளைஞர்களுக்கு வழங்கப்பட்ட அங்கீகாரமாக கருதுகிறேன். நான் எப்பொழுதும் சொல்வது போல் தொண்டர்களில் ஒருவராக இருக்கவே நினைக்கிறேன். ஒவ்வொரு தொண்டனுக்கும் கொடுக்கப்பட்ட அங்கீகாரமாக இதை பார்க்கிறேன். 

நிறைய சவால்களும் வேலைகளும் இருக்கிறது. நான் பேசுவதை விட செயலில் காட்ட விரும்புபவன். கட்சியை வளர்ப்பது, இளைஞரணியை மக்களிடம் கொண்டு சேர்ப்பது, இளைஞரணியில் மேலும் உறுப்பினர்களை சேர்ப்பது தான் எனது முதல் இலக்காக இருக்கும். 

இரண்டு திரைப்படங்கள் இருக்கிறது. எனினும், இதற்கென்று தனியாக நேரம் ஒதுக்கி என்னுடைய நேரத்தை செலவிடுவேன். உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து தலைமை தான் முடிவு எடுக்கும். வாரிசு அரசியல் விமரிசனத்துக்கு எனது செயல்பாடு தக்க பதிலாக இருக்கும்" என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அண்ணாமலையை கைது செய்ய உத்தரவு? ஆளுநர் மாளிகை விளக்கம்

திருமணம் எப்போது? - ராகுல் காந்தி பதில்

சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு துணைத் தேர்வு எப்போது?

சவுக்கு சங்கருக்கு ஒருநாள் போலீஸ் காவல்!

மிகப்பெரிய தோல்வியை நோக்கி மஸ்க்: விவேக் வாத்வா

SCROLL FOR NEXT