தமிழ்நாடு

ஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்கு குடிநீர்: இன்று சோதனை ஓட்டம்

DIN


ஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்வதற்கான சோதனை ஓட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ளது.
சென்னையில் தற்போது கடுமையான குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதைப்போக்க வேலூர் மாவட்டம், ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு ரயிலில் தண்ணீர் எடுத்துச் செல்ல தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக அரசு  ரூ. 65 கோடியை ஒதுக்கி அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மெட்ரோ குடிநீர், ரயில்வே மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் ஜோலார்பேட்டை மேட்டுச்சக்கர குப்பம், கேதாண்டப்பட்டி, பார்சம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் ஒகேனக்கல் தண்ணீரை எடுத்துச் செல்வதற்கான இடத்தைத் தேர்வு செய்வது குறித்து ஆய்வு நடத்தினர். இதையடுத்து, மேட்டுச்சக்கர குப்பம் பகுதியில் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டியில் இருந்து பார்சம்பேட்டை ரயில்வே கேட் அருகே வரை சுமார் 3.5 கி.மீ. தூரத்துக்கு ராட்சத குழாய் அமைக்கப்பட்டு அதிலிருந்து ரயில் மூலமாக தண்ணீர் எடுத்துச் செல்லத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி,பொக்லைன் இயந்திரம் மூலம் பாதைகள் சுத்தம் செய்யப்பட்டு, பூமியில் குழாய்களைப் புதைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
சோதனை ஓட்டம்: இப்பணிகள் செவ்வாய்க்கிழமை நிறைவடைந்தவுடன் சோதனை ஓட்டம் நடைபெற உள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து சீரானது: குழாய்களைப் புதைக்கும் பணியின்போது திருப்பத்தூர்-வாணியம்பாடி நெடுஞ்சாலையில் பள்ளம் தோண்டப்பட்டது. இதனால் அனைத்து வாகனங்களும் மாற்று வழியில் மேட்டுச்சக்கர குப்பம் அருகே உள்ள புதூர் வழியாகச் சென்று ஜோலார்பேட்டை ரயில்வே சந்திப்பு வழியாக திருப்பத்தூர் சென்றன. நெடுஞ்சாலையில் குழாய் அமைக்க தோண்டிய பள்ளங்கள் மூடப்பட்டு தற்போது போக்குவரத்து மீண்டும் தொடங்கியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யோகம் யாருக்கு?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

SCROLL FOR NEXT