தமிழ்நாடு

வேலூரில் வருமான வரித் துறை கட்டுப்பாட்டு அறை திறப்பு

DIN


வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தலை முன்னிட்டு, பணப்பட்டுவாடா உள்ளிட்ட நடவடிக்கைகளைத் தடுக்கும் வகையில் வருமான வரித் துறை சார்பில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. வேலூர் மக்களவைத் தொகுதியில் வாக்காளர்களுக்குப் பணப் பட்டுவாடா செய்வதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில், அத்தொகுதிக்கு மட்டும் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், வேலூர் மக்களவைத் தொகுதிக்கு, வரும் ஆகஸ்ட் 5-ஆம் தேதி மீண்டும் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
கட்டுப்பாட்டு அறை: இந்த முறை வாக்காளர்களுக்கு அரசியல் கட்சியினர் பணப் பட்டுவாடா செய்வதைத் தடுக்கும் வகையிலும், சட்டவிரோத பணப் பரிமாற்றத்தை தடுக்கும் வகையிலும் வருமான வரித் துறை சார்பில் 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை திங்கள்கிழமை திறக்கப்பட்டது.
இந்தக் கட்டுப்பாட்டு அறையை  18 00 42 56 66 என்ற தொலைபேசி எண்ணிலும், 044-28253460 என்ற ஃபேக்ஸ் எண்ணிலும் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம். மேலும், itcontrol.chen@gov.in  என்ற மின்னஞ்சல் முகவரியிலும் புகார்களைத் தெரிவிக்கலாம் என வருமான வரித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்டையன் படப்பிடிப்பில் அமிதாப் பச்சன்-ரஜினிகாந்த்!

‘நீங்க நடிக்க ஆரம்பிக்கலாமே, ஜோனிடா!’

போஷியா! மாற்றுத் திறனாளிகளின் விளையாட்டு பற்றி உங்களுக்குத் தெரியுமா?

திருப்பதியில் ஹெபா படேல்!

பாஜக ஆட்சியில் கவலைக்கிடமான பத்திரிகை சுதந்திரம்: முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT