தமிழ்நாடு

சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்புகளின் நகல்களும் தமிழில் வெளியிட வேண்டும்: மத்திய அமைச்சருக்கு முதல்வர் கடிதம்

DIN

சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்புகளின் நகல்களை தமிழில் வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டுமென முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். 

இதுகுறித்து, மத்திய சட்டம் மற்றும் நீதித் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்துக்கு முதல்வர் பழனிசாமி வெள்ளிக்கிழமை எழுதியுள்ள கடிதத்தின் விவரம்:-

உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளைத்  தமிழிலும் பிற மாநில மொழிகளிலும் வெளியிட்டு மிகப்பெரிய சாதனையை செய்ததற்கு தமிழக மக்களின் சார்பில் தங்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நீதிமன்றத் தீர்ப்புகளை மக்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையிலான இந்த முயற்சியானது தொடர்ந்து நடைபெற வேண்டும். இதன்மூலமாக, சட்ட அமைப்பானது சாதாரண, சாமானிய மக்களுக்கு மிக அருகில் எடுத்துச் செல்லப்படும்.

இந்த சிறந்த முயற்சியை மேற்கொண்டதற்காக தங்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்ளும் இந்தத் தருணத்தில், சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்புகளின் நகல்களைத் தமிழில்  வெளியிட தாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தனது கடிதத்தில் முதல்வர் பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேகேஆர் பேட்டிங்; ஓவர்கள் குறைப்பு!

தொழில்நுட்பத் திறமைகளை மாணவா்கள் வளா்த்துக்கொள்ள வேண்டும்: அண்ணா பல்கலை. துணைவேந்தா்

15-இல் வேலூரில் கல்லூரி கனவு உயா்கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி

வெயிலின் தாக்கத்திலிருந்து விடுபட ஓஆா்எஸ் கரைசல் வழங்க ஏற்பாடு: காஞ்சிபுரம் ஆட்சியா்

மண்ணின் ஈரப்பதம் அதிகரிக்க கோடை உழவு செய்வது அவசியம்

SCROLL FOR NEXT