தமிழ்நாடு

தமிழகத்திற்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவை அதிகரித்துள்ளது கர்நாடகா

DIN


காவிரியில் இருந்து தமிழகத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவை கர்நாடகா அதிகரித்துள்ளது. 

கடந்த சில வாரங்களாக பருவமழை தீவிரமாக பெய்துவரும் சூழலில் கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வந்ததை அடுத்து காவிரி மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தியதையடுத்து முதல்வர் குமாரசாமி உத்தரவின்படி, கபினி மற்றுபம் கேஆர்எஸ் அணையிலிருந்து 2,500 கனஅடி நீர் திறக்கப்பட்டு வந்தது.

இதனிடையே, கர்நாடகாவின் குடகு மாவட்டத்தில் நாளை முதல் 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என்ற அறிவிப்பால் மஞ்சள் நிற அலர்ட் விடுக்கப்பட்டது.

இந்நிலையில்,  காவிரியில் இருந்து தமிழகத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு கேஆர்எஸ் அணையில் இருந்து விநாடிக்கு 5 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆந்திர பேரவைத் தேர்தல்: காலையிலேயே வந்து வாக்களித்த ஜெகன்மோகன், சந்திரபாபு நாயுடு

அவிநாசி ஜவுளி கடையில் தீ விபத்து: பல லட்சம் பொருள்கள் எரிந்து சேதம்!

நாகை எம்பி எம்.செல்வராசு காலமானார்

யானைகள் வழித்தட வரைவு அறிக்கையை திரும்பப் பெற இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

கோபி சி.கே.கே. மெட்ரிக். பள்ளி மாணவி 10ஆம் வகுப்புத் தோ்வில் சிறப்பிடம்

SCROLL FOR NEXT