தமிழ்நாடு

எம்.பி பதவி மீண்டும் கிடைக்காதது வருத்தமே: முன்னாள் மாநிலங்களவை எம்.பி மைத்ரேயன்

தனக்கு அதிமுகவில் எம்.பி பதவி மீண்டும் கிடைக்காதது வருத்தமே என்று முன்னாள் மாநிலங்களவை எம்.பி மைத்ரேயன் தெரிவித்துள்ளார்.

DIN

தனக்கு அதிமுகவில் எம்.பி பதவி மீண்டும் கிடைக்காதது வருத்தமே என்று முன்னாள் மாநிலங்களவை எம்.பி மைத்ரேயன் தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவை எம்.பி. பதவிக் காலம் முடிவடைந்த நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த அதிமுக உறுப்பினர்கள் வா.மைத்ரேயன், கே.ஆர். அர்ஜுனன், ஆர்.லட்சுமணன், டி.ரத்தினவேல், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் டி.ராஜா ஆகியோர் புதன்கிழமையுடன் பதவியில் இருந்து ஓய்வு பெற்றனர். இதையடுத்து சென்னை திரும்பிய முனன்ள் எம்பி. மைத்ரேயன் மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்துக்குச் சென்று மரியாதை செலுத்தினார். 

பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,  மக்களவை, மாநிலங்களவை தேர்தலில் எனக்கு வாய்ப்பு தராதது வருத்தம் அளிக்கிறது. தென்சென்னை தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டேன், வாய்ப்பு அளிக்கவில்லை. ஒற்றை தலைமை, இரட்டை தலைமை இரண்டிலும் பாதகமும், சாதகமும் உள்ளது. ஒற்றை தலைமை ஆட்சி என்பது நல்லமுறையில் இருந்தால் ஏற்றுக்கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அசோக் லேலண்ட் விற்பனை 5% உயா்வு

பாதுகாப்புப் படையுடன் மோதல்: இரு பெண் நக்ஸல்கள் சுட்டுக்கொலை

பள்ளிகளில் மழைநீா் தேங்கக் கூடாது: தலைமை ஆசிரியா்களுக்கு உத்தரவு

விஸ்வகா்மா ஜெயந்தி: பிரதமா் மோடி வாழ்த்து

செங்கோட்டை சிறப்பு ரயிலுக்கு கூடுதல் நிறுத்தங்கள்

SCROLL FOR NEXT