தமிழ்நாடு

ஆடிப்பூரத் திருவிழா: காந்திமதியம்மனுக்கு வளைகாப்பு வைபவம்

DIN

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் கோயிலில் ஆடிப்பூரத் திருவிழாவையொட்டி காந்திமதியம்மனுக்கு வளைகாப்பு வைபவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இக் கோயிலில் ஆண்டுதோறும் ஆடிப்பூரத் திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி நிகழாண்டுக்கான விழா கடந்த 25-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் தினமும் சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை ஆகியவை நடைபெற்று வருகின்றன.

நான்காம் திருநாளான ஞாயிற்றுக்கிழமை நண்பகலில் ஊஞ்சல் மண்டபத்தில் வைத்து காந்திமதியம்மனுக்கு வளைகாப்பு வைபவம் நடைபெற்றது. பல்வேறு வகையான இனிப்பு பலகாரங்கள், மலர்கள், வளையல் உள்ளிட்ட சீர்வரிசைப் பொருள்களுடன் பக்தர்கள் வந்து அம்மனை தரிசனம் செய்தனர். பிரசாதமாக பெண்களுக்கு வளையல்கள் விநியோகிக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீரர்கள் விளையாடுவார்களா? மழை விளையாடுமா?

இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த இலங்கை மீனவர்கள் 7 பேர் கைது

ஐசிஐசிஐ வங்கி முன்னாள் தலைவர் நாராயணன் வாகுல் காலமானார்

பயிர்களில் அதிகளவில் ரசாயன பயன்பாடு: கட்டுப்படுத்த தவறியதா அரசு? உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

ரே பரேலி அல்ல, ராகுல் பரேலி!

SCROLL FOR NEXT