தமிழ்நாடு

மாணவர்களின் வருகைப் பதிவேடு பெற்றோருக்கு எஸ்எம்எஸ் செய்யப்படும்: செங்கோட்டையன்

DIN


சென்னை: தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளின் வருகைப் பதிவேடு பெற்றோருக்கு எஸ்எம்எஸ் செய்யப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

வேளச்சேரியில் உள்ள அரசுப் பள்ளியில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச சீருடை வழங்கும் விழாவில் பங்கேற்றுப் பேசிய செங்கோட்டையன், தேர்தல் காரணமாக சீருடை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது. விரைவில் அனைத்து பள்ளிகளுக்கும் இலவச சீருடைகள் அனுப்பி வைக்கப்படும்.

விரைவில் 7 ஆயிரம் அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள் தொடங்கப்படும். மாணவர்கள் பள்ளிக்கு வருகிறார்களா? இல்லையா? என்பதை ஸ்மார்ட்கார்டு மூலம் பதிவு செய்து, வருகைப் பதிவு பெற்றோருக்கு எஸ்எம்எஸ் செய்யப்படும் என்று தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.800 குறைந்தது

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT