தமிழ்நாடு

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக குறும்படம் வெளியீடு

DIN


ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக மக்கள் நீதி மய்யம் சார்பில் குறும்படம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
 எரிவாயு, எரியும் வாழ்வு என்ற பெயரில் 4 நிமிடங்கள் ஓடும் அந்தக் குறும்படத்தில் கூறியிருப்பது:
ஹைட்ரோ கார்பன் திட்டம் என்பது மக்கள் வாழ்வாதாரத்தை வளர்க்கும் திட்டமா, அழிக்கும் திட்டமா என்பதைப் பார்க்க வேண்டும். ஹைட்ரோ கார்பன் என்பது அன்றாடம் பயன்படுத்தும் பெட்ரோல், டீசல், எரிவாயு போன்றதாகும்.  
மிகப்பெரிய மக்கள்தொகை கொண்ட  இந்தியாவில் உணவுத் தேவையைக் குறிவைக்கும் உலக வணிக அரசியலுக்குத் துணைப் போகவே, உள்ளூர் அரசியல்வாதிகள் ஹைட்ரோ கார்பன் திட்டத்தைச் செயல்படுத்துகின்றனர்.
விளைநிலங்களுக்கு அடியில் தங்கமே இருந்தாலும் அதைப் புறக்கணிப்பதுதான் புத்திசாலித்தனம். தங்கம் அலங்காரம். உணவு ஆதாரம். விளைநிலம் காப்போம் என்று  அதில் காட்சிகளுடன் விளக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உச்ச நீதிமன்றத்தில் அன்று பதஞ்சலி, இன்று மருத்துவக் கழகம்

பிறந்து 4 நாளேயான சிசுவின் உடல் கால்வாயில் மீட்பு!

அரசு வேலைக்காக பதிவு செய்து காத்திருப்போா் 53.74 லட்சம்!

மோடிக்கு எதிராக செல்வப்பெருந்தகை வழக்கு

தக் லைஃபில் அசோக் செல்வன்!

SCROLL FOR NEXT