தமிழ்நாடு

விரைவில் கடனை அடைத்து கல்லூரியை மீட்போம்: பிரேமலதா

DIN


கடனை விரைவில் அடைத்து கல்லூரியை மீட்போம் என தேமுதிக கட்சியின் பொருளாளரும் விஜயகாந்தின் மனைவியுமான பிரேமலதா கூறினார்.
இதுகுறித்து பிரேமலதா சென்னையில் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியது: சேவை மனப்பான்மையுடன் ஆண்டாள் அழகர் கல்லூரியை நடத்தி வருகிறோம். எங்களது திருமண மண்டபமும் இடிக்கப்பட்டது. விஜயகாந்தும் சினிமாவில் நடிக்கவில்லை. இதனால் எங்களுக்கு வருமானத்துக்கு வழி இல்லை.
இந்தச் சூழலில் கல்லூரியில் மாணவர் சேர்க்கையும் குறைந்துவிட்டது. எனவே, கல்லூரியை மேம்படுத்துவதற்காக வங்கியில் கடன் வாங்கினோம்.
இந்தக் கடன் பிரச்னையை சட்ட ரீதியாக எதிர்கொள்வோம். கடன் பிரச்னையை சரி செய்வோம் என்ற நம்பிக்கை இருக்கிறது. விரைவில் கடனை அடைத்து கல்லூரியை மீட்போம். தமிழகத்தில் நிறைய பொறியியல் கல்லூரிகள் கடனில்தான் இருக்கின்றன. நேர்மையானவர்களுக்கு சோதனை வரும். ஆனால் கடவுள் அவர்களைக் கைவிடமாட்டார் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனமழை: நாளை(மே 20) உதகை மலை ரயில்கள் ரத்து

ஜுன் 4ம் தேதி முடிவுகள் நிர்ணயிக்கப்பட்டுவிட்டது: பிரியங்கா காந்தி

இவருக்கு பந்துவீசவே பயமாக இருக்கிறது; இளம் வீரருக்கு பாட் கம்மின்ஸ் பாராட்டு!

இந்தியன் -2 முதல் பாடல் வெளியாகும் தேதி அறிவிப்பு

ஈரான் அதிபா் ரய்சி பயணித்த ஹெலிகாப்டா் விபத்து

SCROLL FOR NEXT