முகப்பு
தமிழ்நாடு

தந்தையின் பைக்கை ஓட்டிச் சென்ற இளம் பெண்ணுக்குத் தெரிய வந்த அதிர்ச்சி உண்மை

தந்தை ஒரு திருடர் என்பது தெரியாமல், அவர் திருடி வந்த பைக்கை ஓட்டிச் சென்ற இளம்பெண் காவல்நிலையத்தில் சிக்கிய சம்பவம் நடந்துள்ளது.

Updated On : 8 மார்ச், 2019 at 11:16 AM
பகிர்:


சென்னை: தந்தை ஒரு திருடர் என்பது தெரியாமல், அவர் திருடி வந்த பைக்கை ஓட்டிச் சென்ற இளம்பெண் காவல்நிலையத்தில் சிக்கிய சம்பவம் நடந்துள்ளது.

14 வயது இளம்பெண் ஓட்டி வந்த பைக்கைப் பின்தொடர்ந்து சென்ற அதன் உரிமையாளர், பைக்கையும், பெண்ணையும் பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தார். விசாரணையில் அது அவரது தந்தையால்  திருடப்பட்ட பைக் என்பது தெரிய வந்ததை அடுத்து, அந்த பைக்கையும், பெண்ணின் தந்தையையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

மணலியைச் சேர்ந்த கார்த்தி (33) தனது குடும்பத்தோடு அருகில் உள்ள சிவன் கோயிலுக்குச் சென்று திரும்பும் போது கோயில் வாசலில் நிறுத்தியிருந்த ஹோண்டா ஆக்டிவா காணாமல் போனதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.

Advertisement

தனது குடும்பத்தினரை ஆட்டோவில் ஏற்றி வீட்டில் இறக்கிவிட்டுவிட்டு காவல்நிலையத்துக்கு வந்து கொண்டிருந்த போது, ஒரு  இளம்பெண் தனது வாகனத்தை ஓட்டிச் சென்று கொண்டிருப்பதைப் பார்த்து ஆட்டோவில் அவளைத் துரத்திப் பிடித்தார்.

பைக்கையும், பெண்ணையும் காவல்நிலையத்தில் ஒப்படைத்தார் கார்த்திக். அப்போதுதான் தனது தந்தை இந்த பைக்கைத் திருடி வந்திருப்பது அப்பெண்ணுக்குத் தெரிந்தது.

விசாரணையில், அப்பெண்ணின் தந்தை சரவணன் இருசக்கர வாகனங்களை திருடும் கும்பலைச் சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது. அவரைக் கைது செய்ததோடு, அவரிடம் இருந்து 4 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.