முகப்பு
தமிழ்நாடு

மின்னுவதெல்லாம் தண்ணீர்தான்: இதுவே கோடை சொல்லும் தத்துவம்

மானாவாரியாக மரங்களை வெட்டிக் குவித்து, செல்போன் டவர்களை நட்ட நமக்கு மிகக் கடினமான வீட்டுப்பாடம் காத்திருக்கிறது.

Updated On : 9 மார்ச், 2019 at 4:01 PM
பகிர்:


மானாவாரியாக மரங்களை வெட்டிக் குவித்து, செல்போன் டவர்களை நட்ட நமக்கு மிகக் கடினமான வீட்டுப்பாடம் காத்திருக்கிறது.

பருவமழை நம்மை ஏமாற்றிச் சென்றதன் பலனாக, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது.

300 சதுர அடி கொண்ட தனது சிறிய வீடு முழுக்க டம்ளர், சொம்பு, குடம், குண்டான் என பல பாத்திரங்கள் முழுக்க தண்ணீரை நிரப்பி வைத்துள்ளார் சங்கீதா.

Advertisement

அண்ணா நகரில் உள்ள அன்னை சத்யா நகரில் உள்ள ஒரு குடிசைதான் இவர் வாழும் வீடு. ஆனால் தனது வீட்டில் நடமாடக் கூட போதிய இடம் வைக்காமல் வீடு முழுக்க தண்ணீரை நிரப்பி வைத்திருக்கும் சங்கீதா, மின்னுவதெல்லாமே தண்ணீர்தான். நகையை விட தண்ணீரைத்தான் பத்திரமாக பாதுகாக்கிறோம் என்று கூறுகிறார் 24 ஆண்டுகளாக இப்பகுதியில் வசித்து வரும் இவர்.

இதேப்போன்றுதான் 4வது தெருவில்இருக்கும் சத்யாவின் வீடும் இருந்தது. வீட்டு வாசலில் தொடங்கி வீடு முழுவதும் மஞ்சள் நிற தண்ணீர் நிறைந்த பாத்திரங்கள் அணிவகுத்து நம்மை வரவேற்றன.

எங்கள் வீட்டில் 4 பேர் பெரியவர்கள். ஒருவருக்கு 4 பக்கெட் தண்ணீர்  தேவைப்படும். டேங்கர் லாரி வந்தால் குறைந்தது 15 - 20 பக்கெட் தண்ணீர் பிடித்தால்தான் அன்றைய தினத்தை ஓட்ட முடியும். சில சமயம் இன்னும் அதிகம் தண்ணீர்பிடித்தால் தான் அடுத்த நாள் லாரி வரும் வரை தண்ணீர் இருக்கும் என்கிறார் தண்ணீர் பக்கெட்டுகளை பார்த்தபடி.

இதில் சோகம் என்னவென்றால் சிறிய வீடுகளில் தண்ணீரைப் பிடித்துவைத்துவிட்டு நடக்கவோ படுக்கவோ இடமில்லாமல் சிரமப்படும் நபர்களும் இருக்கிறார்கள் என்பதே.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.