தமிழ்நாடு

திமுகவில் இணைந்த பாமக முன்னாள் எம்எல்ஏ

DIN

பாமகவின் துணை பொதுச்செயலாளரும், ஓமலூரின் முன்னாள் எம்எல்ஏவுமான தமிழரசு இன்று திமுகவில் இணைந்தார். 

மக்களவைத் தேர்தலையொட்டி தமிழக அரசியல் களம் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கிறது. மற்றொருபுறம் தேசிய அரசியலை போன்று தமிழக அரசியலிலும் கட்சி தாவல் தொடங்கி இருக்கிறது. நேற்று அமமுகவின் விபி கலைராஜன் திமுகவில் இணைந்த நிலையில் இன்று ஓமலூர் தொகுதி முன்னாள் பாமக எம்எல்ஏ தமிழரசு இணைந்துள்ளார். 

சேலத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அவர் தன்னை திமுகவில் இணைத்துக்கொண்டார். அவருடன் சேலம் மாவட்ட பாமக செயலாளர் ஜெயவேல் உள்பட நூற்றுக்கணக்கான பாமகவினரும் திமுகவில் இணைந்தனர். தேர்தல் நெருங்கும் நிலையில் பாமகவில் இருந்து பலர் திமுகவில் இணைந்துள்ளது திமுகவுக்கு பலத்தையும் பாமகவுக்கு பலவீனத்தையும் அளித்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறுகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொய்யை ஆயிரம்முறை சொன்னால்... மோடிக்கு கார்கே விளக்கக் கடிதம்

மாந்திரீகக் கண்ணா?

மகனைக் கொல்ல ரூ.75 ஆயிரம் கூலி: கைதான தேடப்பட்ட குற்றவாளி!

தீபக் சஹாருக்கு காயமா? சிஎஸ்கே பயிற்சியாளர் பதில்!

கத்தரிப்பூ சேலைக்காரி! மிருணாளினி ரவி...

SCROLL FOR NEXT