தமிழ்நாடு

புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் கே.நாராயணசாமி: என்.ரங்கசாமி அறிவிப்பு

புதுவை மக்களவைத் தொகுதி தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளராக கே.நாராயணசாமி போட்டியிட உள்ளதாக அக்கட்சியின் தலைவர் என்.ரங்கசாமி இன்று அறிவித்துள்ளார்.  

DIN

புதுவை மக்களவைத் தொகுதி தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளராக கே.நாராயணசாமி போட்டியிட உள்ளதாக அக்கட்சியின் தலைவர் என்.ரங்கசாமி இன்று அறிவித்துள்ளார்.  

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 மக்களவைத் தொகுதிகளுக்கு ஏப்ரல் 18ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இத்துடன் தமிழகத்தில் காலியாக இருக்கும் 18 சட்டசபை தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தப்படவுள்ளது. இத்தேர்தலில் தமிழகத்தில் அதிமுக-பாஜக-பாமக கூட்டணி கட்சிகள் ஓர் அணியாகவும், திமுக-காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் மற்றொரு அணியாகவும் போட்டியிடுகின்றன.

இதில் புதுச்சேரி மக்களவைத் தொகுதி திமுக கூட்டணியில் காங்கிரசுக்கும், அதிமுக கூட்டணியில் என்ஆர் காங்கிரஸ் கட்சிக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் சபாநாயகராக இருந்த வைத்திலிங்கம் போட்டியிடுவார் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட நிலையில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் அறிவிக்கபடாமல் இருந்தது.

இந்நிலையில் புதுவை மக்களவைத் தொகுதி தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளராக கே.நாராயணசாமி போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அக்கட்சியின் தலைவர் என்.ரங்கசாமி இன்று அறிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நமஸ்தே இந்தியா.. அன்பின் வெளிப்பாட்டுக்கு நன்றி: விடியோ வெளியிட்ட மெஸ்ஸி!

எண்ணெய் வயல்கள் வேண்டும்! வெனிசுலாவைச் சுற்றிவளைத்த அமெரிக்க கடற்படை!

ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்! நிதீஷ் குமாருக்கு எதிராக காவல்துறையில் புகார்!

பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவின் மிக உயரிய விருது!

ஜாஃப்ராபாதில் 2 சகோதரா்கள் சுட்டுக் கொலை

SCROLL FOR NEXT