தமிழ்நாடு

பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் பொள்ளாச்சி ஜெயராமன் மகனுக்கு தொடர்புண்டு: உதயநிதி ஸ்டாலின்

DIN


வாழப்பாடி: பொள்ளாச்சியில் இளம்பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரத்தில், தமிழக துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் மகன் பிரவீனுக்கு தொடர்புண்டு என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். 

திமுக கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவாக தோ்தல் பிரசாரம் செய்து வரும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின், சேலம் மாவட்டம் வாழப்பாடியில், கள்ளக்குறிச்சி தொகுதி திமுக வேட்பாளர் கெளதம சிகாமணிக்கு ஆதரவு கேட்டு, திறந்த வேனில் தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். ]

அப்போது அவர் பேசுகையில், பிரதமர் நரேந்திரமோடி, நாட்டு மக்கள் அனைவருக்கும் தலா ரூ.15 லட்சம் கொடுப்பதாக வாக்குறுதியளித்தார். ஆனால் கொடுக்கவில்லை. அந்த தொகையை அவரது பாக்கெட்டில் வைத்துக் கொண்டார். 

கிராமப்புற மாணவ-மாணவா்களும் மருத்துவர் ஆக வேண்டும் என நினைப்பது தப்பா? நீட் தோ்வு அமுல்படுத்தப்பட்டதால் மருத்துவராக முடியாத சோகத்தில் சகோதரி அனிதா உயிரிழந்தார். திமுக ஆட்சி பொறுப்புக்கு வந்ததும் நீட் தேர்வு, விவசாயக்கடன்கள் ரத்து செய்யப்படும். 

இந்தியாவின் வில்லன் மோடி. ஓபிஎஸ் - இபிஎஸ் இருவரும் அடியாட்கள், அன்புமணி, விஜயகாந்த் இருவரும் காமெடியர்கள், பிரதமர் மோடி இதுவரை நான்கு முறை மட்டுமே தமிழகத்திற்கு வருகை தந்துள்ளார். இதில் மூன்று முறை தேர்தல் வாக்கு சேகரிப்புக்காக தான் வந்துள்ளார். ரூ.47 கோடியை செலவு செய்து 52 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்தது மட்டும் தான் பிரதமர் மோடி சாதனை.

பொள்ளாச்சியில் இளம்பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரத்தில், தமிழக துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் மகன் பிரவீனுக்கு தொடர்புண்டு. இப்படி சொல்வதால் என்மீது வழக்கு தொடரக்கூடும், நான் எதற்கு கவலைப்படப்போவதில்லை. 

கருணாநிதியின் பேரனாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மகனாக கேட்கிறேன். நடைபெறும் தேர்தலில் திமுக கூட்டணிக்கு வாக்களித்து ஆட்சி மாற்றத்திற்கு வாய்ப்பு தாருங்கள் என்றார் உதயநிதி ஸ்டாலின். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

செந்தில் பாலாஜி வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் மன்னிப்புக் கேட்ட அமலாக்கத்துறை

சென்னையில் வாட்டும் வெயில் மட்டுமா.. குடிநீர் தட்டுப்பாடும் வருமா? ஏரிகளின் நீர்மட்ட நிலவரம்!

சென்னைக்கு கோடையில் குடிநீர் தட்டுப்பாடு வர வாய்ப்பு இல்லை

வெங்கடேஷ் பட்டின் ‘டாப் குக்கு டூப் குக்கு’!

ஆவடி இரட்டைக் கொலை நடந்த இடத்தில் கிடைத்த செல்ஃபோன் யாருடையது? தீவிர விசாரணை

SCROLL FOR NEXT